பக்கம் எண் :

696அயோத்தியா காண்டம்

அன்று நான் இசைந்த ஆண்டு எலாம் - அன்று அதற்குஉடன்பட்டுக்
(காடு புகுவதாக) ஏற்றுக்கொண்ட பதினான்கு ஆண்டுகளும்;  இன்றொடு
ஏறுமோ?  -
இன்றோடு முடிந்துபோய்விடுமோ?

     ஏற்றுக்கொண்டதை யான் நிறைவேற்ற நீ உதவி செய்தல் வேண்டும்
என்று பரதனிடம் தெரிவித்தான் இராமன். அப்படியில்லையேல் தந்தையார்
மேல் பிழிவந்து சேரும். அவரே ‘வசைக்கு அசைந்த’ எந்தையார் - பழிக்கு
அஞ்சுகிறவர் என்றும் குறிப்பித்தான்.                              114

2489.‘வாய்மை என்னும் ஈது அன்றி, வையகம்,
“தூய்மை” என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ?
தீமைதான், அதின் தீர்தல் அன்றியே,
ஆய் மெய்யாக; வேறு அறையல் ஆவதே?

     ‘வையகம் - உலகம்;  வாய்மை என்னும் ஈது அன்றி - சத்தியம்
என்கிற இதுவொன்றில்லாமல்;  “தூய்மை என்றும் ஒன்று  உண்மை
சொல்லுமோ?
- “தூய்மை என்கின்றஒன்று தனியே இருப்பதாகச்
சொல்லுமா?; தீமைதான்- தீய குணம் என்பது; அதின்தீர்தல் அன்றியே-
அந்தச் சத்தியத்தை விட்டு நீங்குதல்தானே அல்லாமல்; ஆய் -
ஆராய்கின்ற;  மெய ஆக - உண்மையாக;  வேறு அறையல் ஆவதே -
சத்தியமன்றிவேறு  ஒன்றைச் சொல்ல இயலுமா ? (இயலாது என்றபடி.)

     ‘வாய்மையே தூய்மையாம்; வாய்மைதவிரத் தூய்மை தனிவேறில்லை;
தீமை என்பது வாய்மையின் தவறுவதே அன்றி வேறன்று; சத்தியத்துக்கு
இணையாக, மாற்றாக வேறொன்றைச் சொல்ல இயலாது. ஆகவே, தந்தையார்
உரையை, சத்தியத்தைக் காப்பதுதான் என்க தூய்மையாகும். வேறு இல்லை’
என்றான் இராமன். ‘புறத்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்’ (குறள். 298) என்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
                                                            115

2490.‘எந்தை ஏவ, ஆண்டு ஏழொடு ஏழ் எனா
வந்த காலம் நான் வனத்துள் வைக, நீ
தந்தபாரகம் தன்னை, மெய்ம்மையால்
அந்த நாள் எலாம் ஆள், என் ஆணையால்.

     ‘எந்தை ஏவ -என் தந்தை கட்டளை இட்டவாறு; ஆண்டு ஏழொடு
ஏழ் எனா
- பதினான்கு ஆண்டுகள் என்று; வந்த காலம் - அமைந்த
காலம்வரை; நான் வணத்துள் வைக - நான் காட்டில்தங்கியிருக்க; நீ -;
தந்த பாரகம் தன்னை
- தந்தை அளித்த அரசை; மெய்ம்மையால்-
(தந்தையின்) சத்தியம் தவறாமல்; அந்த நாள் எலாம் - அந்தப் பதினான்கு
ஆண்டுகளும்; என் ஆணையால் - என் கட்டளையால்; ஆள் -
ஆள்வாயாக.