உதவிட- எளிதில் எல்லாம் பொருள்களையும் உண்டாக்கி உலகிற்கு உதவ வேண்டி; தோன்றினான்- வெளிப்பட்டருளினான். பிரளய காலத்து ஓடுங்கிய பிரமன் தான் ஒடுங்கிய நாபிக் கமலத்தில் இருந்து மீண்டும்வெளிப்படுவான் என்பது படைப்புக் கொள்கை. திருமாலின் நாபிக் கமலத்தில் பிரமன்வெளிப்பட்டுப் படைப்புத் தொழிலை நடத்தத் தொடங்கினான் என்றவாறாம். 121 2496. | ‘அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது உன் தனிக் குலம்; முதல் உள்ள வேந்தர்கள் இன்று அளவினும் முறை இகந்துளார் இலை; ஒன்று உளது உரை இனம்; உணரக் கேட்டியால். |
அவன்- அத்திசைமுகன்; அன்று- அக்காலத்து; உலகினை அளிக்க- உலகத்தைப் படைக்க; முதல் ஆகியது - முதலில் உண்டாகியது; உன் தனிக் குலம் - உன்னுடைய ஒப்பற்ற சூரிய குலம்; உள்ள வேந்தர்கள் - இந்தக் குலத்தில் தோன்றியஅரசர்களும்; முறை இகந்து உளார் - முறைமை தவறியவர்; இன்று அளவினும் - இன்றுவரையிலும்; இலை - இல்லை; இனம் ஒன்று உரை உளது - இன்னும் ஒரு வார்த்தைஇருக்கிறது; உணரக் கேட்டி - தெரியக் கேட்பாயாக. “ஆதிமால் அமலன் நாபிக்கமலத் தயனுதித்தயன் மரீசியெனும் அண்ணலை அளித்த பரிசும், காதல் கூர்தரு மரீஇசி மகனாகி வளரும் காசிபன் கதிர் அருக்கனை அளித்த பரிசும் “எனக் (கலிங்கத்துப். இராச. 9) கூறுமாறு திருமால் - அயன் - மரீஇசி, காசிபன் - சூரியன் எனக் குலமுறை காணுதலின் முதற்றோன்றிய குலமாதல் அறிக. நீ மூத்தவனாதலின் முறை இகவாமல் நீயே அரசு புரிதல் வேண்டும் என்பது வசிட்டன் கூற்றாகும். 2497. | ‘ “இத இயல் இயற்றிய குரவர் யாரினும், மத இயல் களிற்றினாய்! மறுஇல் விஞ்சைகள் பதவிய இருமையும் பயக்க, பண்பினால் உதவிய ஒருவனே, உயரும்” எனபரால். |
‘மத இயல் களிற்றினாய்’ - செருக்குன்ற இயல்பினை உடைய ஆண் யானையைஉடையவனே!; மறுவில் விஞ்சைகள் - குற்றமற்ற கல்விகளை; பதவிய இருமையும் பயக்க- பக்குவப்பட இம்மை மறுமை இரண்டிலும் பயன் கொள்ளுமாறு; பண்பினால் உதவிய -அன்போடு கற்பித்துக் கொடுத்த; ஒருவனே - ஆசிரியனே; இத இயல் இயற்றிய -(ஒருவனுக்கு) நன்மைதரும் இயல்பினைச் செய்த; குரவர்யாரினும் உயரும்’- எல்லாரினும் மேம்படுவான்; என்பர் - என்று கூறுவார்கள். |