பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 701

     இராமன் தந்தை தாயர் குரவர் யாரினும் உயர்ந்தவர் என முன்
கூறியவதனால், இங்கேஆசிரியரே குரவர் யாரினும் உயர்ந்தவர் என
வசிட்டன் கூறி, ஆசிரியராகிய தம் வார்த்தையைமறுத்தல்வடாது என்பார்
ஆயினார். “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” (வெற்றிவேற்கை. 1)
என்பதும் கருதுக. பதவிய - பதவியாக உள்ள என்றுமாம்.           123

2498.‘என்றலால், யான் உனை எடுத்து விஞ்சைகள்
ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால்,
“அன்று” எனாது, இன்று எனது ஆணை; ஐய! நீ
நன்று போந்து அளி, உனக்கு உரிய நாடு’ என்றான்.

     ‘என்றலால் - (ஆசிரியரே மேம்பட்ட குரவர்) என்று கூறுவதால்;
ஐய! -இராமனே; யான் உனை எடுத்து - நான் உன்னை வளர்த்து;
விஞ்சைகள் -கல்விகள்; ஒன்று அலாதன பல - மிகப் பல; உதவிற்று-
கற்பித்தது;  உண்மை -; (ஆகவே) ‘இன்று எனது ஆணை’ - இன்று
என்னுடைய கட்டளையை; அன்று எனாது” - அல்ல என்று மறுக்காமல்;
உனக்குரிய நாடு - உனக்கு உரிமையுள்ளநாட்டினை; போந்து- அடைந்து;
நன்று அளி’ - நன்றாகக் காப்பாற்று; என்றான் - என்று கூறினான்.

     குரவர் யாரினும் ஆசிரியரே மேலோர், அவர் வார்த்தையை மறுத்தல்
கூடாது, மறுத்தல் அறநெறியன்று. யான் உன் ஆசிரியன் என்பது உண்மை.
என் வார்த்தை மறாது அரசாள்க என்றான் வசிட்டன். ‘மறை ஒதுவித்து
இவரை வளர்த்தானும் வசிட்டன் காண்’ (660) என்பதை ஈண்டு நினைக.

வசிட்டனை வணங்கி இராமன் தன்நிலை விளக்கல்  

2499.கூறிய முனிவனைக் குவிந்த தாமரை
சீறிய கைகளால் தொழுது, செங்கணான்,
‘ஆறிய சிந்தனை அறிஞ! ஒன்று உரை
கூறுவது உளது’ எனக் கூறல் மேயினான்:

     கூறிய - (இவ்வாறு) சொன்ன; முனிவனை - வசிட்டனை(ப்) பார்த்து);
செங்கணான் - சிவந்த கண்களை உடையவனாகிய இராமன்;  குவிந்த
தாமரை சீறிய கைகளால்தொழுது
- குவிந்திருக்கின்ற தாமரையைத் தன்
அழகால் சீறி வென்ற கைகளால் வணங்கி; ‘ஆறிய சிந்தனை அறிஞ! -
அடங்கிய மனத்தை உடைய அறிஞனே!; உரை ஒன்று கூறுவது உளது’-
வார்த்தை ஒன்று சொல்ல வேண்டுவது உள்ளது; என - என்று; கூறல்
மேயினான்
- சொல்லத் தொடங்கினான்.

     குவித்த கைகளுக்குக் குவிந்த தாமரையை உவமையாக்கிக்கூறினார்.
‘செங்கண்’ கண் சிவந்திருத்தல் சிறந்த ஆடவர்க்குரிய இலக்கணம். “செங்கண்