பக்கம் எண் :

706அயோத்தியா காண்டம்

     ‘ஆம் எனில் - அப்படியானால்; ஐய! - தலைவனே; ஏழ் இரண்டு
ஆண்டில்
- பதினான்கும ஆண்டுகள் கழிந்தவுடன்; நீ -; நாம நீர்
நெடுநகர் நண்ணி
- (பகைவர்)அஞ்சம்படியான அகழி நீர் சூழ்ந்த பெரிய
அயோத்தி நகரை அடைந்து; நானிலம் - பூமியை;கோமுறை புரிகிலை
என்னின்
- அரசாட்சி செய்திடாயானால்; (யான்) கூர் எரி சாம்- மிக்க
நெருப்பில் (வீழ்ந்து) இறந்து படுவேன்; இது சரதம் - இது உண்மை; நின்
ஆணை சாற்றினேன்
- உன்மேல் ஆணையிட்டுக் கூறினேன்.

     நாமம் - அச்சம், பெருமை என்னும்பொருள்கள். ‘கோவாகி முறை
புரிகிலை என்னின்’ எனப் பிரித்தலும் ஒன்று.                       133

பரதன் கருத்திற்கு இராமன் இசைதல்  

2508.என்பது சொல்லிய பரதன் யாதும் ஓர்
துன்பு இலன்; அவனது துணிவை நோக்கினான்
அன்பினன், உருகினன்; ‘அன்னது ஆக’ என்றான்-
தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான்.

     என்பது - என்ற இச் சொற்களை; சொல்லிய - கூறிய; பரதன்-;
யாதும் ஓர் துன்பு இலன்
- யாதொரு துன்பமும் இல்லாதவனாக ஆனான்;
தன் புகழ் தன்னினும் பெரியதன்மையான் - தனது புகழ் தன்னைவிடப்
பெரிதாகப் பெற்ற தன்மையுடைய இராமன்; அவனதுதுணிவை
நோக்கினான்
- பரதனது உறுதியைப் பார்த்து; அன்பினன் உருகினன் -
அன்பினால் உருகி; ‘அன்னது ஆக’ என்றான் - அப்படியே ஆகட்டும்
என்று கூறி அதனைஉடன்பட்டான்.

     புகழினும் தான் பெரியவன் எனவும் உரைப்பதுண்டு.            134

     பரதன், இராமன் திருவடிகளை வேண்டிப் பெற்று  
முடிமேற் சூடிச் செல்லுதல்  

2509. விம்மினன் பரதனும், வேறு செய்வது ஒன்று
இன்மையின், ‘அரிது’ என எண்ணி, ஏங்குவான்,
‘செம்மையின் திருவடித்தலம் தந்தீக’ என,
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்.

     பரதனும் -; வேறு செய்வது ஒன்று இன்மையின் - வேறு செய்யக்
கூடியது ஒன்றும்இல்லதமையால்; ‘அரிது’ என எண்ணி - (இராமனைப்
பிரித்து இருத்தல்) இயலாது என்றுகருதி; விம்மினன் ஏங்குறவான் -
அழுது இளைத்து; ‘திருவடித்தலம் செம்மையின்தந்தீக’