என- உன் திருவடிநிலைகள் இரண்டையும் செப்பமாக எனக்கு அளித்தருளுக எனக் கேட்க; (இராமனும்) எம்மையும் தருவன இரண்டும் நல்கினான் - எல்லா உலக இன்பங்களையும் தருவனவாகிய தன் இரண்டு திருவடிம நிலைகளையும் நிலைகளையும் கொடுத்தருளினான். இம்மை, மறுமை என்றாற் போல எம்மை என்பதற்கு எப்பிறவியினும் (எல்லா வின்பங்களும்தருவன) எனப் பொருள் உரைத்தலும் ஒன்று. 135 2510. | அடித்தலம் இரண்டையும், அழுத கண்ணினான், ‘முடித்தலம் இவை’ என, முறையின் சூடினான்; படித்தலத்து இறைஞ்சினன், பரதன் போயினான் - பொடித் தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான். |
தலம் பொடி இலங்குறு பொலம்கொள் மேனியான் பரதன் - மண்ணின் புழுதி படிந்துவிளங்குகிற பொன்மயமான திருமேனியுடையம பரதன்; அழுத கண்ணினான் - அழுத கண்ணுடையனாய்;அடித்தலம் இரண்டையும் - இராமனின் இரண்டு திருவடிநிலைகளையும்; ‘முடித்தலம் இவை’ எனமுறையிற் சூடினான் - எனக்கு முடிகள் இவையே என்று கொண்டு முறைமைப்படி தலையின்மேற்சூடிக்கொண்டு; படித்தலத்து இறைஞ்சினான் - மண்ணில் விழுந்து; வணங்கிப் போயினான்- மீண்டு (அயோத்திக்குச்) சென்றான். இராமன் திருவடிநிலைகளையே தனக்கு. மகுடமாகச் சூடிக் கொண்டான். 136 யாவரும் மீளுதல் 2511. | ஈன்றவர் முதலிய எண் இல் சுற்றமும், சான்றவர் குழுவொடு தவத்துளோர்களும், வான் தரு சேனையும், மற்றும் சுற்றுற, மூன்று நூல் கிடந்த தோற் முனியும் போயினான், |
ஈன்றவர் முதலிய எண் இல் சுற்றமும் - பெற்ற தாயர் முதலாகிய கணக்கிட முடியாதசுற்றத்தினரும்; சான்றவர் குழுவொடு- பெரியோர்களும்; தவத்துளோர்களும் - தவமுனிவர்களும்; வான்தரு சேனையும்- பெருமை பொருந்திய சேனையும்; மற்றும் -ஏனைய பிறரும்; சுற்றுற - (பரதனைச்) சூழ்ந்து செல்ல; மூன்று நூல் கிடந்த தோள்முனியும் - முப்புரி நூல் அணிந்த தோள்களை உடைய வசிட்ட முனிவனும் (உடன்வர); போயினான்- மீண்டு சென்றான். வடமும், வடத்திற் புரியும், புரியில் நூலும் மும் மூன்றாகவே அமைதலின் ‘மூன்று நூல்என்றார். ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்” (திரு முருகு 183.) என்பது காண்க. வான் -உயர்வு, அரசர்க்கு உயர்வு தருகின்ற சேனை என்பதாம். 137 |