பக்கம் எண் :

710அயோத்தியா காண்டம்

மிகைப் பாடல்கள்

குறிப்புரை

1. மந்திரப் படலம்

188.‘மன்னனே! அவனியை
     மகனுக்கு ஈந்து, நீ
பன்ன அருந்தவம்
     புரி பருவம் ஈது’ என,
கன்ன மூலத்தினில்
     கழற வந்தென,
மின் எனக் கருமை போய்
     வெளுத்தது - ஓர் மயிர்.

     அவனி - பூமி; கன்ன மூலம் - காதின் அடியில், காது அடியில்
தலைமயில்நரைத்தல் முதுமைக்கு அடையாளம் ஆகும்; சுழறல் -
இடித்துரைத்தல்.

189.தீங்கு இழை இராவணன்
     செய்த தீமைதான்
ஆங்கு ஒரு நரையது
     ஆய் அணுகிற்றாம் என,
பாங்கில் வந்திடு நரை
     படிமக் கண்ணடி
ஆங்கு அதில் கண்டனன் -
     அவனி காவலன்.

     படிமம் - பிரதிமா என்னும் வடசொல் திரிபு. தன்னுடைய உருவம்.

(இந்த இரண்டு செய்யுட்களும், ‘மண்ணுறு முரசு
இனம்’ எனத் தொடங்கும் முதற் பாடலின்முன்,
படலத்தின் தொடக்கத்தில் உள்ளன.)