190. | எய்திய முனிவரன் இணைகொள் தாமரை செய்ய பூங் கழலவன் சென்னி சேர்த்த பின், ‘வையகத்து அரசரும் மதி வல்லாளரும் வெய்தினில் வருக’ என மேயினான் அரோ. |
முனிவரன் - வசிட்டன்; செய்ய பூங்கழலவன் - தயரதன்; மதிவல்லாளர்- அறிவின் வலிமை படைத்தவர், இங்கே அமைச்சர்; வெய்து - விரைவாக; அரோ- அசை. 4-1 191. | ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைவினன் ஆகி, நாளும் நல் தவம் புரிந்து, நல் நளிர் மதிச் சடையோன் தாளில் பூசையின் கங்கையைத் தந்து, தந்தையரை மீள்வு இல் இன் உலகு ஏற்றினன் ஒரு மகன், மேல்நாள். |
நளிர் மதிச் சடையோன் - சிவபிரான். சிவனை வழிபட்டுக் கங்கையைக்கொணர்ந்து தன் முன்னோர்கள் ஆய சகரர்களை நல்லுலகு சேர்ப்பித்தவன்பகீரதன். 66-1 192. | ‘நறைக் குழற் சீதையும் ஞால நங்கையும், மறுத்தும், இங்கு ஒருவற்கு மணத்தின்பாலரோ - கறுத்த மா மிடறுடைக் கடவுல் கால வில் இறுத்தவற்கு அன்றி?’ என்று இரட்டர் கூறினார். |
மறுத்தும் - மீட்டும் - இங்கே ‘வேறும்’ என்பது பொருள்; கடவுள்- சிவன்; இரட்டர் - இரட்டதேயத்து அரசர். 76-1 |