196. | ‘கற்ற நான்மறையவர் கண்ணை, மன்னுயிர் பெற்ற தாய் என அருள் பிறக்கும் வாரியை, உற்றதேல் உலகினில் உறுதி யாது?’ என, கொற்றவேல் கனை கழல் குருக்கள் கூறினார். |
வாரி - கடல்; கனை - செருக்கிய; குருக்கள் - குரு தேசத்தவர்கள். 76-5 197. | ‘வாய் நனி புரந்த மா மனுவின் நூல் முறைத் தாய் நனி புரந்தனை, தரும வேலினாய்,! நீ நனி புரத்தலின் நெடிது காலம் நின் சேய் நநி புரக்க!’ எனத் தெலுங்கர் கூறினார். |
வாய்- இடம்; முறைத்தாய்- முறைப்படி; நின் சேய்- இராமன். 76-6 198. | ‘வையமும் வானமும் மதியும் ஞாயிறும் எய்திய எய்துப; திகழும் யாண்டு எலாம், நெய் தவழ் வேலினாய்! நிற்கும் வாசகம்; செய் தவம் பெரிது!; எனச் சேரர் கூறினார். |
நிற்கும் வாசகம் - புகழ். 76-7 199. | ‘பேர் இசை பெற்றனை; பெறாதது என், இனி? சீரியது எண்ணினை; செப்புகின்றது என்? |
|