| ஆரிய! நம் குடிக்கு அதிப! நீயும் ஓர் சூரியன் ஆம்’ எனச் சோழர் சொல்லினார். |
ஆரிய - தசரதனை நோக்கிய விளி. மேலோனே என்பதாம். சோழர் சூரிய குலத்தவர்ஆதலின் ‘நம் குடிக்கு’ என்றார். 76-8 200. | ஒன்றிய உவகையர்; ஒருங்கு சிந்தையர், தென் தமிழ் சேண் உற வளர்த்த தென்னரும், ‘என்றும் நின் புகழொடு தருமம் ஏமுற, நின்றது நிலை’ என நினைந்து கூறினார். |
தென்னர்- பாண்டியர்; ஏமுற - ஏமம்; உற- பாதுகாப்பு அடைய. 76-9 201. | ‘வாள் தொழில் உழவ! நீ உலகை வைகலும் ஊட்டினை அருள் அமுது; உரிமை மைந்தனைப் பூட்டினை ஆதலின், பொரு இல் நல் நெறி காட்டினை; நன்று’ எனக் கங்கர் கூறினார். |
வாள் தொழில் உழவ! - தயரதனை நோக்கிய விளி. “வில்லேர் உழவர்” என்பது போல. 76-10 202. | ‘தொழு கழல் வேந்த! நின் தொல் குலத்துளோர் முழு முதல் இழித்தகை முறைமை ஆக்கி, ஈண்டு எழு முகில் வண்ணனுக்கு அளித்த இச் செல்வம் விழுமிது, பெரிது!’ என மிலேச்சர் கூறினார். |
|