பக்கம் எண் :

726அயோத்தியா காண்டம்

     அறுபதினாயிரம் மனைவியர்களும் தீக்குளித்தனர்.            136-1

11. கங்கை காண் படலம்

238.வந்து எதிரே விழுந்தவனும்
     வணங்கினான்; வணங்காமுன்,
சந்த நெடுந் திரள்
     புயத்தான் தழுவினான்; தழுவியபின்,
இந்த இடர் வடிவுடன் நீ
     எங்கு எழுந்தாய் - இமையோர்தம்
சிந்தையினும் சென்னியினும்
     வீற்றிருக்கும் சீர்த்தியாய்!

     2334 ஆம் பாடலின் மாற்றுருவம் இப்பாடல்.                32-1

239.ஏறினர் இளவலோடு,
     இரங்கு நெஞ்சு கொண்டு
ஊறிய தாயரும்
     உரிய சுற்றமும்;
பேறு உள பெரு நதி
     நீங்கி, பெட்போடும்
கூறு தென் கரையிடைக்
     குழீஇய போதிலே.

     பேறு உள பெருநதி - புண்ணியப் பயன் உடைய கங்கை.     63-1

240.தன் அன தம்பியும்,
     தாயர் மூவரும்,
சொன்ன தேர் வலவனும்,
     தூய தோழனும்,
துன்னினர் ஏறலும்,
     துழா துடுப்பு எனும்
நல்நயக் காலினால்
     நடத்தல் மேயினான்.

     தம்பி - சத்துருக்கனன்; தேர் வலவன் - சுமந்திரன்; தோழன் -
குகன்; துழா துடுப்பு - துழாவுகின்ற துடுப்பு. இனி துழாவும், துடுப்பும்
என்னும் இரண்டுகால்களால் படகை நடத்துதல் என்றும் ஆம். துழா
என்பது நீரைத் துழாவும் நீண்ட கோல் ஆகும். துடுப்பு - மட்டை
ஆகும். 63-2