பக்கம் எண் :

மிகைப்பாடல்கள் 727

241.அன்ன காதல்
     அருந் தவர், ‘ஆண் தகை!
நின்னை ஒப்பவர் யார்
     உளர், நீ அலால்?’
என்ன வாழ்த்திடும்
     ஏல்வையில், இரவியும்
பொன்னின் மேருவில்
     போய் மறைந்திட்டதே.

     ஏல்வை - பொழுது.                                     5-1

242.இன்ன ஆய
     எறி கடல் சேனையும்,
மன்னர் யாவரும்,
     மன் இளந் தோன்றலும்,
அன்ன மா முனியோடு
     எழுந்து, ஆண்தகை
துன்னு நீள் வரைக்கு
     ஏகிய சொல்லுவாம்.

     ஆண்தகை துன்னு - இராமன் தங்கியுள்ள.                  19-1

243.‘ஐய! நின்னுடைய
     அன்னை மூவரும்,
வைய மன்னரும்,
     மற்றும் மாக்களும்.
துய்ய நாடு ஒரீஇத்
     தோன்றினார்; அவர்க்கு
உய்ய நல் அருள்
     உதவுவாய்’ என்றான்.

     ஒரீஇ - நீங்கி.                                          89-1

244.கங்குல் வந்திடக்
     கண்டு, யாவரும்
அங்கணே துயில்
     அமைய, ஆர் இருள்