பக்கம் எண் :

8அயோத்தியா காண்டம்

யும் புகழ் அடைவதற்குரிய செயல்களையும் ;  தெரிந்துகொண்டு -
ஆராய்ந்து அறிந்துகொண்டு ;  பால் வரும் உறுதி யாவும் - அவ்
வாராய்ச்சிகளின் பயனாக வரும் நற்பயன்கள் யாவற்றையும் ;  தலைவற்குப்
பயக்கும்நீரார்
- தம் அரசனுக்குக் கொடுக்கின்ற தன்மையுடையவர்கள்.

     இதனால் அமைச்சர்கள் பணிபுரியும் வகை உரைக்கப்பட்டது. இடன் -
கடைப்போலி. நுனிதல் - நுட்பமாக அறிதல். பால்வரும் உறுதி - அந்த
அந்தப் பகுதிகளால்விளையும் நன்மை.

    கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அருவினையும் மாண்ட தமைச்சு

    அருவினை என்ப உளவோ கருவியான்
    காலம் அறிந்து செயின்
                        (குறள், 631, 483)                    7

1321.தம்உயிர்க்கு இறுதி எண்ணார் ; 
     தலைமகன் வெகுண்ட போதும்,
வெம்மையைத் தாங்கி, நீதி
     விடாதுநின்று, உரைக்கும் வீரர் ; 
செம்மையின் திறம்பல் செல்லாத்
     தேற்றத்தார் ; தெரியும் காலம்
மும்மையும் உணர வல்லார் ; 
     ஒருமையே மொழியும் நீரார்.

     தலைமகன் வெகுண்ட போதும் - அரசன் சீற்றங்கொண்ட
காலத்திலும் ; தம் உயிர்க்கு இறுதி எண்ணார் - இதனைச் சொன்னால்
தம் உயிர்க்கு அழிவு விளையும்என்றுகூட நினையாதவராய் ; 
வெம்மையைத் தாங்கி - அவனது சீற்றத்தின் கொடுமையை
ஏற்றுக்கொண்டு ;  விடாதுநின்று நீதி உரைக்கும் வீரர் - தம் கடமையை
விட்டுவிடாமல்உறுதியாக நின்று உரிய நீதிகளை எடுத்துச்சொல்லும் துணிவு
மிக்கவர்கள் ;  செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் -
நன்னெறியிலிருந்து வழுவுதல் இல்லாததெளிவுடையவர்கள் ;  தெரியும்
மும்மைக் காலமும்
- அறியத்தக்க முக்காலநிகழ்வுகளையும் ;  உணர
வல்லார்
- உணரத்தக்க ஆற்றல் பொருந்தியவர்கள் ; ஒருமையே
மொழியும் நீரார்
- உண்மையையே பேசும் இயல்பினையுடையவர்கள்.

     இறுதி - அழிவு ;  ஆபத்து எண்ணார் - முற்றெச்சம். தாம் கொண்ட
முடிவில் ஊற்றமாய் நின்று எதிர்ப்புகளை வீழ்த்தி மேம்படுதலால் வீரர் என்று
புகழப்பெற்றனர்என்க. காலம் நிகழ்ச்சியைச் சுட்டிற்று. ஒன்றல்லது
இரண்டன்மையின் ஒருமை என்பது உண்மையைச்சுட்டியது. ஒருமையே
மொழியும்