‘இப் புவிஎலாம் - இந்த உலகமெல்லாம்; சரதம் - மெய்யாக; இவ்வரதனே- இந்த இராமனே; தம்பியோடும் - இலக்குமணனோடும் (சேர்ந்து); காக்குமேல்- (அரசு நடாத்திக்) காப்பானாயின்; பரதனும் இளவலும் - பரதனும், சத்துருக்கனனும்; வரம்பு இக்காலமும் - (இராமன் அரசு செய்யும்) அளவற்ற காலங்கள்; பதியின் நீங்கிப்போய் - அயோத்தியிலிருந்து விலகிச் சென்று; மாதவ விரதம் செயவிடுதல் - உயர்ந்ததவமாகிய விரதத்தைச் செய்யும்படி அனுப்பி விடுதல்; நன்று! - அவனுக்கு நன்மை பயப்பதாம்;’ என்றாள் - என்று கூறினாள். இராமன் ஆட்சியில் நகரவாசம் செய்வதைவிட, வனவாசம் சென்று தவம், விரதம் செய்தால்மறுமைக்காவது பயன் என்றாளாம். இலக்குமணனை இராமன் தம்பி என்றும், சத்துருக்கனனைப் பரதன்தம்பி என்றும் கூறினமை “பரதனும் இளவலும் ஒரு நொடி பகிராது ......வரதனும் இளவலும்" என்னும் முன்னைய செய்யுளாலும் (307) தேற்றமாதல் காண்க. இப்பாடலால் குறிப்பாக அரசு பெற்று ஆளாதவர் வனவாசம் செய்தல் வேண்டும் எனக் காட்டி, அதனையே பின்னர் (இராமனுக்கு) வரமாக வேண்ட வழிசெய்தாள்மந்தரை என்றும் கூறுலாம். 65 | 1464. | ‘பண்ணுறு கட கரிப் பரதன், பார் மகள் கண்ணுறு கவினராய் இனிது காத்த அம் மண்ணுறு முரசுடை மன்னர் மாலையில் எண்ணுறப் பிறந்திலன்; இறத்தல் நன்று’ என்றாள். |
‘பண்உறு-அலங்கரித்தல் அமைந்த; கடகரி - மத யானையையுடைய; பரதன்-; பார்மகள் கண்ணுறு கவினராய் - நிலமகள் விரும்பத் தக்க அழகுடையவராய்; இனிது காத்த - இனிமையாக அரசாண்ட; அம்மண்ணுறு முரசுடை மன்னர் மாலையில் -அந்த மார்ச்சனை செறிந்த முரசத்தினை உடைய அரசர் வரிசையில் வைத்து; எண்ணுற - நினைக்குமாறு(அரசனாக); பிறந்திலன் - பிறக்கவில்லை; இறத்தல் நன்று - (எனவே) உயிர்வாழ்வதனினும்இறப்பதே மேல்;’ என்றாள் - அரசனாகும் பேறு இல்லாதவன் அரசகுலத்தில் பிறந்து வாழ்வதைவிடச் சாவதே மேல் என்றுபரதனுக்காக இரங்கினாளாம். மன்னர் மாலை - அரச பரம்பரை வரிசை. அது குலமுறை கிளத்து படலத்திற்கூறியவாற்றான் உணர்க. மண் - மார்ச்சனை - அஃதாவது ஒலிச்செறிவு ஆகும். அது மண்பூசப் பெறுதலால்உளதாகும் என்பர். 66 | 1465. | ‘பாக்கியம் புரிந்திலாப் பரதன்தன்னை, பண்டு ஆக்கிய பொலங் கழல் அரசன், ஆணையால், தேக்கு உயர் கல் அதர், கடிது சேணிடைப் போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்.’ | |