நீரார் என்பதற்கு முன்னுக்குப்பின் மாறுபட்டுப் பேசாமல் ஒருபடியாகப் பேசுபவர் என்றும் பொருள் கொள்ளலாம். அமைச்சர் பலராயினும் ஒருமிடராய்க் கருத்துரைப்பர்என்பதாம். 8 கலிவிருத்தம் 1322. | நல்லவும் தீயவும் நாடி, நாயகற்கு, எல்லை இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் ; ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின், தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார். |
நாயகற்கு - தன் அரசனுக்கு ; நல்லவும் தீயவும் நாடி -நன்மை தருவனவற்றையும் தீமை பயப்பனவற்றையும் ஆராய்ந்து ; எல்லை - முடிவில்;மருத்துவர் இயல்பின் - நோயாளிகளின் விருப்பு வெறுப்புகளை நோக்காது அவர்களது நலத்தைநோக்கிச் செயற்படும் மருத்துவர்களின் தன்மைபோல ; எண்ணுவார் - தலைவனுக்குநன்மையையே கருதுவர் ; ஒல்லை வந்து உறுவன - அன்றியும் விரைவில் வந்து சேரும்தீங்குகள் ; உற்ற பெற்றியின் - நேர்ந்த இடத்து ; தொல்லைநல்வினை என - முன்னர்ச் செய்த புண்ணியம் வந்து உதவுவது போல; உதவும் சூழ்ச்சியார்- அத்தீங்குகளைப் போக்கத் துணைபுரியும் சிந்தனைத்திறம் உடையவர்களும் ஆவார். இங்கு அமைச்சர்கள் மருத்துவர்களைப் போன்று இருந்தனர் என்று சுட்டப்படுகிறது. நோயற்றவன் உறுதிபெற ஊட்டம்தரும் மருந்தினை நாடியும் நோயுற்றவன் நலம்பெறநோய் நாடி, அதன் காரணத்தை நாடி, அதனைத் தணிக்கும் வழிகளை நாடி, நோயாளி நோய்ஆகியவற்றின் தன்மைக்கேற்பத் தக்கவாறு செயற்படுபவர் மருத்துவர். அதுபோல அமைச்சர்களும்அரசன் ஆட்சி நலமுடன் திகழச் செய்தற்குரியவற்றைத் தேர்ந்து தெளிந்து செயற்படுத்தியும்,தீமை நேர்ந்துழி அதனை ஆராய்ந்து காரணத்தைக் கண்டறிந்து, நீக்குதற்குரிய வழிகளை எண்ணித்தக்கது கொண்டு துப்படைதும் செய்தனர். 9 அமைச்சர்கள் வருகை 1323. | அறுபதினாயிரர் எனினும், ஆண்தகைக்கு உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம் பெறல் அருஞ் சூழ்ச்சியர் ; திருவின் பெட்பினர் ;- மறி திரைக் கடல் என வந்து சுற்றினார். |
திருவின் பெட்பினர் - செல்வப் பெருக்கம் வாய்ந்தவர்கள் ; அறுபதினாயிரர் எனினும் - அறுபதினாயிரம் பேர் என்றாலும் ; ஆண்தகைக்குஉறுதியின் - ஆண்மையிற் சிறந்தவனாகிய தசரதனுக்கு நன்மையைக் கருதுவதில் ; இவர்க்கு உணர்வு ஒன்று என்று - இவர்கள் எல்லோர்க்கும் அறிவு ஒன்றே என்று ; உன்னல்ஆம் - நினைக்கத்தக்க; |