அழைப்புகள் காட்டும். ‘உலகு அளிக்கும்’ என்பதற்கு, உலகைக் காப்பாற்றும் என்று பொதுவாகப்பொருள் உரைத்தலும் ஒன்று, ‘ஆல்’ தேற்றம். 68 | 1467. | ‘அரசர் இல் பிறந்து, பின் அரசர் இல் வளர்ந்து, அரசர் இல் புகுந்து, பேர் அரசி ஆன நீ கரை செயற்கு அருந்துயர்க் கடலில் வீழ்கின்றாய்; உரை செயக் கேட்கிலை; உணர்தியோ?’ என்றாள். |
(மந்தரை மீண்டும்) ‘அரசர் இல் பிறந்து - அரச குலத்தில் பிறந்து; பின்- பிறகு; அரசர் இல் வளர்ந்து - அரசு குடும்பத்தில் வளர்ந்து; அரசர் இல்புகுந்து - அரச குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு; பேர் அரசி ஆன நீ - (சக்கரவர்த்தியின்)பட்டத்தரசியாக ஆன நீ; கரைசெயற்கு அருந்துயர்க் கடலில் - கரை இடுவதற்கு முடியாத துன்பக்கடலில்; வீழ்கின்றாய் - வீழ்ந்து கொண்டேயிருக்கிறாய்; உரை செய - (நான்) எடுத்துச் சொல்லியும்; கேட்கிலை - கேட்கின்றாயில்லை; உணர்த்தியோ?’- பின் அனுபவத்தால் உணர்வாயோ?;’ என்றாள் - அரச குலத்தில் பிறந்து வளர்ந்து பட்டத்தரசியாக இருக்கிற உனக்கு, உன் அரசனாகாது மாற்றாள் மகன் அரசன் ஆவதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள எப்படி நேர்ந்தது? என்று கூறினாள்கூனி. உணர்தியோ- அறிவினால் அறிந்து கொள்ளாத நீ அனுபவத்தால் எதிர்காலத்தில் சக்களத்தியிடம்துன்பப்பட்டுப் புரிந்துகொள்வாயோ என்பது பொருள். இனி உனக்கு உணர்ச்சி யுள்ளதோ என்பதுபொருந்துமேற் கொள்க. 69 | 1468. | ‘கல்வியும், இளமையும், கணக்கு இல் ஆற்றலும், வில் வினை உரிமையும், அழகும், வீரமும், எல்லை இல் குணங்களும், பரதற்கு எய்திய; புல்லிடை உகுந்த அமுது ஏயும்போல்’ என்றாள். |
பரதற்கு - பரதனுக்கு; கல்வியும் இளமையும் -; கணக்கு இல் ஆற்றலும் - அளவில்லாத வல்லமையும்; வில்வினை உரிமையும் - வில் தொழிலில் திறமையும்; அழகும், வீரமும் -; எல்லை இல் குணங்களும் - அளவில்லாத நற்குணங்களும்; எய்திய - வந்து பொருந்தி உள்ளன; (அரசன் ஆகாவிடின் அவை அனைத்தும்) புல்லிடை உகுந்த அமுது ஏயும் போல்-புல்தரையில் சொரிந்த தேவர் அமுதம் போலப் பயனற்றதாக ஆகும் போலும்;’ என்றாள் - அரசனாயிருந்தால் குணச்சிறப்புகள் மக்களுக்குப் பயன்செய்யும்; அவனுக்குப் புகழ் தரும். இல்லாவிடில் வீண் என்றால் மந்தரை. கைகேயியை நோக்கி ‘உன் மகனுக்குஅரசன் ஆவதற்கு என்ன குறைச்சல்’ என்று கேட்டாளாம். இவ்வளவு சிறப்புகள் உடைய உன் மகனை உன் அறியாமையால் பாழாக்குகிறாயே என்று இரங்கிக் கூறுவாள்போலப் பேசினாள். ‘புல்லிடை உகுத்தல்’,“வில்லினும் வாளினும் விரிந்த ஆண்தொழில், புல்லிடை உகுத்தனென்” என்று பின் |