பக்கம் எண் :

104ஆரணிய காண்டம்

 எண் தகு குணத்தினை;' எனக்
     கொடு, உயர் சென்னித்
துண்ட மதி வைத்தவனை ஒத்த
     முனி சொல்லும்:

    உயர் சென்னித் துண்டமதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும்-
தன் உயர்ந்த தலையில் பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமானைப் போன்ற
அகத்திய முனிவர் சொல்வாரானார்; எண்தகு குணத்தினை - யாவரும்
மதிக்கத்தக்க நற்பண்புகளுடைய இராமனே! ; தண்டக வனத்து உறைதி
என்று உரைதரக் கொண்டு -
தண்டகாரணியத்தில் நீ
எழுந்தருளியிருக்கிறாய் என (இங்கு வரும் முனிவர்கள்) கூறிய சொல்லைக்
கேட்டு; இத்திசை உண்டு வரவு எனக் கொடு - இத்திசைக்கு உனது
வருகை உண்டு என்று கொண்டு; பெரிது உவந்தேன் - மிக
மகிழ்ந்திருந்தேன்; என - அசை.

     எண் தகு குணத்தினை - எட்டு மேலான பண்புகளைக் குறிக்கும்
என்பர். (குறள். 9) துண்டமதி - மதித்துண்டு, இளம்பிறை மதி. அகத்தியரைச்
சிவபிரானுக்கு ஒப்பிடல் முன்னர்க் காணப்படுகிறது. 'ஈசன் நிகர் ஆய்' (2670);
உண்டு வரவு எனக் கருதியதை ஒட்டி இராமன் எழுந்தருளியமை குறிப்பால்
பெறப்படும்.                                                   51

2682.'ஈண்டு உறைதி, ஐய! இனி,
     இவ் வயின் இருந்தால்,
வேண்டியன மா தவம்
     விரும்பினை முடிப்பாய்;
தூண்டு சின வாள் நிருதர்
     தோன்றியுளர் என்றால்,
மாண்டு உக மலைந்து, எமர்மனத்
     துயர் துடைப்பாய்;

    ஐய! ஈண்டு உறைதி - ஐயனே! இங்கு நீ தங்கி இருப்பாயாக; இனி
இவ்வயின் இருந்தால் -
இனிமேல் இவ்விடத்தில் நீ இருந்தால்,
வேண்டியன மாதவம் விரும்பினை முடிப்பாய் - நீ விரும்பிய பெரிய
தவங்களை விரும்பியவாறே செய்து முடிப்பாய்; தூண்டுசின வாள் நிருதர்
தோன்றியுளர் என்றால் -
தூண்டப்பட்ட கோபத்தோடு கூடிய வாளேந்திய
அரக்கர்கள் வந்தனர் என்றால்; மாண்டுஉக, மலைந்து - அவர்கள் அழிந்து
கீழே சிதறப் போர் செய்து; எமர் மனத்துயர் துடைப்பாய் - எம்போன்ற
முனிவர்களின் மனத்துன்பத்தைப் போக்குவாய்.

     வேண்டியன மாதவம் என்பது இராமனின் சிறிய தாய் கைகேயி கூறிய
வண்ணம் ஆகும். தவங்கள் என்பர் (1601). வாள்நிருதர் - வாள்போல்
கொடிய அரக்கர் எனலுமாம். வாள் எனில் கொடுமையும் ஆம். நீ இங்கே