பக்கம் எண் :

சடாயு காண் படலம் 115

 வாள் இரவியின்
     பொலி மௌலியான்தனை,

    இரு நாலினோடு ஒன்று கூடின கோள் - எட்டோடு ஒன்று
சேர்ந்து ஒன்பதாகிய கிரகங்களை; ஆளுறு திகிரி போல் - ஆளுதலைக்
கொண்ட சிம்சுமாரம் எனும் துருவச்சக்கரம் போல் விளங்கும்; ஆரத் தான்
தனை -
நவரத்தின மாலையை உடையவனை; நீளுறு மேருவின் நெற்றி
முற்றிய -
உயர்ந்த மேருமலையின் உச்சியில் பொருந்திய; வாள்
இரவியின் பொலி மௌலியான் தனை -
ஒளியுடைய கதிரவன் போல
விளங்குகின்ற கிரீடத்தை உடைய சடாயுவை;

     சடாயுவின் உருவிற்கு மேருவும், தலைக்குச் சிகரமும், கிரீடத்திற்குக்
கதிரவனும் உவமை. சடாயு கழுகரசன் ஆதலால் முடியும் ஆரமும் கூறப்
பெற்றன. ஆரத்திற்கு சிம்சுமாரம் எனும் துருவசக்கரம் உவமை ஆகிறது.
அச்சக்கரம் நவக்கிரகங்களை இயக்குவது என்பது புராணச் செய்தி,
நவக்கிரகங்கள் நவமணிக்கு உவமை ஆயின. நிறவேற்றுமையைச்
சுட்டுகிறது. நவக்கிரகங்கள் முறையே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,
வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது. நவமணிகளாவன : கோமேதகம்,
நீலம், பவழம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்.

     துருவன் நடுவிலிருந்து சுற்றிக் கொண்டு காற்றின் வடிவான
கயிறுகளால் கட்டப் பெற்ற நவக்கிரகங்களையும் சுற்றும் சக்கரம்,
ஆளுறுதிகிரி எனப்படும். இவ்வுவமைகளால் சடாயுவின் கழுத்தில்
விளங்கும் உரோமமும், தலையில் விளங்கும் கொண்டையும் சிறப்பிக்கப்
பெற்றன.                                                    7

2697. சொல் பங்கம் உற நிமிர்
     இசையின் சும்மையை,
அல் பங்கம் உற வரும்
     அருணன் செம்மலை,
சிற்பம் கொள் பகல் எனக்
     கடிது சென்று தீர்
கற்பங்கள் எனைப் பல
     கண்டுளான்தனை,

    சொல் பங்கம் உற நிமிர் இசையின் சும்மையை - சொற்கள்
கூறமுடியாமல் தோல்வியுறும்படி வளர்கின்ற புகழின் பெரும் தொகுதி
போன்றவனை; அல்பங்கம் உற வரும் அருணன் செம்மலை - இருள்
அழிவடையும்படி தோன்றும் அருணனின் மகனை; கற்பங்கள் எனைப் பல-
பல கல்ப காலங்களை; கடிது சென்று தீர் சிற்பங்கொள் பகல் என -
விரைவில் கழியும் சிறுமையுற்ற நாட்களைப் போல; கண்டுளான் தனை -
கண்டுள்ள சடாயுவை

     இதனால் சடாயு மிக்கபுகழும், நீண்ட வாழ்நாளும் கொண்டவர் என்க.
இவன் புகழைச் சொல்லச் சொல்ல தீராது என்பதைச் 'சொல் பங்கம் உற