பக்கம் எண் :

116ஆரணிய காண்டம்

நிமிர் இசை' என்ற தொடர் சுட்டும். அருணன் கதிரவனின் தேரோட்டி,
அருணன் உதயமானால் இருள் இரிந்தோடுவதால் 'அல்பங்கம் உற வரும்
அருணன்' எனப்பட்டான். சிற்பம் - சிறுமை, அற்பம்                8

2698.ஓங்கு உயர் நெடுவரை ஒன்றில்
     நின்று, அது
தாங்கலது இரு நிலம்
     தாழ்ந்து தாழ்வுற
வீங்கிய வலியினில்
     இருந்த வீரனை-
ஆங்கு அவர் அணுகினர்,
     அயிர்க்கும் சிந்தையார்.

    ஓங்கு உயர் நெடுவரை ஒன்றில் நின்று - மிக உயர்ந்த பெரிய
மலை ஒன்றில் தங்கியிருந்து; அது தாங்கலது இருநிலம் தாழ்ந்து தாழ்வுற-
அம்மலை தன்னைத் தாங்க முடியாமல் பெரிய பூமியில் புதைந்து
ஆழ்ந்து போக; வீங்கிய வலியினில் இருந்த வீரனை - மிக்க பலத்தோடு
இருந்த வீரனாம் அச்சடாயுவை; அவர் ஆங்கு அயிர்க்கும் சிந்தையார்
அணுகினர் -
இராமலக்குவர் அவ்விடத்தில் ஐயமுற்ற மனமுடையவராய்
அருகே சென்றனர்.

     அவர் தங்கியிருந்த மலை அவர் உடற் பொறையைத் தாங்காமல்
பூமியில் ஆழ்ந்த தால் அவர் வலிமை புலப்படும். சடாயு தங்கியிருந்த மலை
பிரசரவணம் எனப்படும். இராமலக்குவர் ஐயுறக்காரணம் அவருடைய
பேருருவைக் கண்டு அரக்கனோ என எண்ணியதாம்.               9

இராம-இலக்குவரும், சடாயுவும் ஒருவரை ஒருவர் ஐயுறல்

2699.'இறுதியைத் தன்வயின்
     இயற்ற எய்தினான்
அறிவு இலி அரக்கன் ஆம்;
     அல்லனாம் எனின்,
எறுழ் வலிக் கலுழனே?
     என்ன உன்னி, அச்
செறி கழல் வீரரும்,
     செயிர்த்து நோக்கினார்.

    அச் செறி கழல் வீரரும் - அந்த நெருங்கிய வீரக்கழல் அணிந்த
வீரர்களாம் இராமலக்குவர்களும்; (இவன்) தன்வயின் இறுதியை இயற்ற
எய்தினான் -
தனக்குச் சாவை உண்டாக்கிக் கொள்ள இங்கு வந்தவனாம்
இவன்; அறிவு இலி அரக்கன் ஆம் - அறிவற்ற யாரோ ஓர் அரக்கன்
ஆவான்; அல்லன் ஆம் எனின் - அவ்வாறு அரக்கன் அல்லாதவன்