ஆனால்; எறுழ் வலிக் கலுழனே - மிக்க வலிமையுடைய கருடனே ஆவான்; என்ன உன்னி - என்று எண்ணி; செயிர்த்து நோக்கினார் - சந்தேகப்பட்டுப் பார்த்தனர். தன்வயின் இறுதி இயற்ற என்பதற்குத் தன்மூலமாக இராமலக்குவர்க்கு அழிவைச் செய்ய என்று கூறலுமாம். நல்லறிவின்றித் தீயவழிப் புகுந்து தனக்குத் தானே அழிவைத் தேடியதால் 'அறிவிலி அரக்கன்' எனப்பட்டான். எறுழ் வலி - ஒருபொருட்பன்மொழி. இது வடிவு பற்றி வந்த ஐயநிலை உவமையணி. 10 2700. | வனை கழல் வரி சிலை மதுகை மைந்தரை, அனையவன்தானும் கண்டு, அயிர்த்து நோக்கினான்- 'வினை அறு நோன்பினர் அல்லர்; வில்லினர்; புனை சடை முடியினர்; புலவரோ?' எனா | அனையவன் தானும் - அச்சடாயு தானும்; வனைகழல் வரிசிலை மதுகை மைந்தரை - கட்டிய வீரக்கழலையும் கட்டமைந்த வில்லையும் வலியையும் உடைய (தயரதன்) மக்களை; கண்டு - பார்த்து; வினை அறு நோன்பினர் அல்லர் - இருவினைகளை அறுத்திட முயலும் தவசிகள் அல்லர்; (மாறாக) வில்லினர் - வில்லுடையவராக விளங்குகின்றனர்; புனை சடை முடியினர் - தரித்த சடையோடு கூடிய முடியுடையவராயுள்ளனர்; (அதனால்) புலவரோ - தேவர்களோ; எனா அயிர்த்து நோக்கினான் - என்று எண்ணி ஐயுற்றான் தவம் புரிகின்ற முனிவர் சடைமுடி பூண்டிருப்பர். ஆயின் வில்லேந்தி வாரார். இதனால் சடாயு ஐயுறுதற்குக் காரணம் ஏற்பட்டது. இராமலக்குவர் திருமேனியின் ஒளி கண்டு தேவரோ என எண்ணினார் எனலுமாம். இராமலக்குவர் சடாயுவைப் பார்த்து 'நீ யார்?' என்று கேட்ட போது நான் உன் தந்தை தயரதன் நண்பன் என்று என்னைத் தெரிந்து கொள்' என விடை கூறியதாக வான்மீகம் கூறும். 11 2701. | 'புரந்தரன் முதலிய புலவர் யாரையும் நிரந்தரம் நோக்குவென்; நேமியானும், அவ் வரம் தரும் இறைவனும், மழுவலாளனும், | |