பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு - ஐந்து பூதங்களும் ஓர் உருவம் எடுத்துக்கொண்டு; புதிது என்று ஓத ஒத்த உருவத்தன் - புதுமையான ஒரு வடிவு எடுத்து இவ்வாறு வந்தனஎன்று சொல்லத் தக்க வடிவுடையவனும்; உரும் ஒத்த குரலன் - இடி ஓசையைப் போன்ற குரலோசை உடையவனும்; அயன் காதலித்து அளித்த கடையிட்ட பாத கணித லக்கம் - பிரமன்மகிழ்ந்து கொடுத்த கடையிலே கணக்கிட்டு வைத்த கால் இலட்சம்; மதவெற்பு அவை படைத்தவலியான் - மதயானைகளாம் அவ்விலங்குகள் அடைந்த வலிமையை உடையவன். விராதனின் வலிய உருவமும் கொடிய குரலும் கூறப்பட்டுள்ளன. கடையிட்ட பாதலக்கம் ஒன்றேகால் இலட்சம். வெற்பு - ஆகுபெயர். 17 | 2534. | சார வந்து, அயல் விலங்கினன்- மரங்கள் தரையில் பேர, வன் கிரி பிளந்து உக, வளர்ந்து இகல் பெறா வீர வெஞ் சிலையினோர் எதிர், விராதன் எனும் அக் கோர வெங் கண் உரும்ஏறு அன கொடுந் தொழிலினான். |
விராதன் எனும் அக்கோர வெங்கண் உரும் ஏறு அன கொடுந் தொழி லினான் - விராதன் என்று சொல்லப்படும் அந்த அச்சமூட்டும் கொடிய கண்களையும் பேரிடி போன்ற கொடியதொழிலையுமுடையவன்; (வரும் வேகத்தால்); மரங்கள் தரையில் பேர - மரங்கள்நிலத்தில் நின்ற இடம் விட்டுப் பெயர்ந்து விழவும்; வன்கிரி பிளந்துக - வலியமலைகள் பிளவுண்டு சிதறவும்; வளர்ந்து இகல் பெறாவீர வெஞ்சிலையினோர் எதிர் சார வந்துஅயல் விலங்கினன் - பேருருக்கொண்டு வளர்ந்து போரைப் பெறாத வீரமும் கொடிய வில்லும்உடைய இராமலக்குவர் முன்னே அருகில் வந்து எதிராகக் குறுக்கிட்டு நின்றான். விலங்கினன் - குறுக்கிட்டான். விராதன் - எதிலும் நிறைவு பெறாதவன். 18 விராதன், சீதையைக் கவர்ந்து செல்லுதல் | 2535. | நில்லும், நில்லும் என வந்து, நிணம் உண்ட நெடு வெண் பல்லும், வல் எயிறும், மின்னு பகு வாய் முழை திறந்து, அல்லி புல்லும்அலர் அன்னம் அனையாளை, ஒரு கை, |
|