பக்கம் எண் :

சடாயு காண் படலம் 121

     பலவேறு பட்ட ஐயவுணர்கள் கொண்ட சடாயு தம் நண்பன்
தயரதனின் சாயலை இராமலக்குவரிடம் கண்டதால் அவ்விருவர் மீதும் மிக்க
பரிவு கொண்டதால் 'நீவீர் யார்?' எனக் கேட்டதுடன் 'என மனத்தில்
பதியும்படி கூறுங்கள்' என வேண்டிக் கொண்டார். நினைப்பு இனம் - பல
எண்ணங்களின் கூட்டம் இவற்றின் விளக்கத்தை முந்திய பாடல்களில்
கண்டோம் (2700 - 2704).                                     16

'தயரதன் மைந்தர்' எனக் கேட்டு, சடாயு மகிழ்தல்

2706.வினவிய காலையில்,
     மெய்ம்மை அல்லது
புனை மலர்த்
     தாரவர் புகல்கிலாமையால்,
'கனை கடல் நெடு நிலம்
     காவல் ஆழியான்,
வனை கழல் தயரதன்,
     மைந்தர் யாம்' என்றார்.

    வினவிய காலையில் - கேட்ட பொழுது; மெய்ம்மை அல்லது
புகல்கிலாமையால் புனை மலர்த் தாரவர் -
உண்மை அல்லாமல்
வேறொன்றைப் பேசுவதில்லை ஆதலால் அழகிய பூமாலை அணிந்த
இராமலக்குவர்; கனை கடல் நெடுநிலம் காவல் ஆழியான் - ஒலிக்கும்
கடலாற் சூழ்ந்த பெரிய உலகம் யாவையும் காக்கும் ஆணைச்
சக்கரமுடையவனும்; வனை கழல் தயரதன் மைந்தர்யாம் என்றார் -
தரித்த வீரக்கழலுடையவனுமாகிய தயரதனுடைய மக்கள் நாங்கள்' எனக்
கூறினர்.

     முன்னம் அறியாதவரிடம் உண்மையைக் கூறக் கூடாது என்பது
அரசியல் நீதி. எனினும் இராமலக்குவர் எத்தகையோரிடமும் அஞ்சாது
உண்மை கூறும் தனிப் பண்புடையவர்களாவர். புனை - அழகு தயரதன் -
தசரதன் என்பதன் திரிபு. பத்துத் திக்குகளிலும் தன் தேரைச் செலுத்தி
வெற்றி கண்டவன்; அரக்கர் தேர் பத்தை வென்றவன்; கருடனைத் தன்
தேர்க் கொடியாகக் கொண்டவன் எனவும் பல காரணம் கூறுவர்.

     புகல்கிலாமை என்பதிலுள்ள கில் என்பது உறுதிப் பொருளை
உணர்த்தும் இடைநிலை.                                        17

2707.உரைத்தலும், பொங்கிய
     உவகை வேலையன்,
தரைத்தலை இழிந்து அவர்த்
     தழுவு காதலன்,
'விரைத் தடந் தாரினான்,
     வேந்தர் வேந்தன்தன்,