| சென்றபின் அவற் சேர்குவென் யான்' என்றான். |
என்று சொல்ல - என்று இராமலக்குவர் வருந்திக் கூற; இருந்து அழி நெஞ்சினன் - அழிந்த வண்ணம் இருக்கின்ற மனத்தை உடைய சடாயு; நின்ற வீரரை நோக்கி நினைந்தவன் - தன் எதிரே நின்ற வீரர்களாம் இராமலக்குவரைப் பார்த்து ஒரெண்ணத்தை எண்ணியவனாய்; அது அன்று என்னின் - தீக்குளிக்கும் அச்செயல் உடன்பாடு அன்று என்றால்; ஐயன்மீர் அயோத்தியின் சென்றபின் அவற்சேர்குவென் யான் என்றான் - அன்புடையவர்களே! நீங்கள் அயோத்தி நகரைப் போய்ச் சேர்ந்த பின் நான் தயரதனைத் துறக்க உலகில் சென்று அடைவேன் எனக் கூறினார். இப்போது நான் இறப்பது உங்களுக்கு உடன்பாடு அன்று என்றால் வன வாசம் முடிந்து அயோத்தி செல்லும் அளவு உங்களுக்குக் களைகணாய் இருக்கிறேன் எனச் சடாயு இராமலக்குவரின் கருத்துக்கிசைந்து கூறியது புலனாகிறது. அயோத்தியில் அகழி, மதில், படை, சான்றோர், அமைச்சர் இருப்பதால் அவர்க்குப் பாதுகாப்பு வேறு வேண்டாம் என்பதால் அயோத்தியின்... சென்றபின்' என்றார். அன்பினால் இராமலக்குவரை 'ஐய' என விளித்தார் சடாயு. இது மரபு வழுவமைதி. 30 சடாயு, 'நீவிர் வனம் புகுந்தமை என்?' என வினவல் 2720. | 'வேந்தன் விண் அடைந்தான் எனின், வீரர் நீர் ஏந்து ஞாலம் இனிது அளியாது, இவண் போந்தது என்னை? புகுந்த என்? புந்தி போய்க் காந்துகின்றது, கட்டுரையீர்' என்றான். | (பின் அச்சடாயு) வேந்தன் விண் அடைந்தான் எனின் - தயரதச்சக்கரவர்த்தி துறக்கம் சென்றான் என்றால்; வீரர் நீர் ஏந்து ஞாலம் இனிது அளியாது இவண் போந்தது என்னை - வீரர்களாகிய நீங்கள் ஆள்வதற்குரிய நாட்டை மனம் விரும்பிக் காப்பாற்றாமல் இங்கு வந்தது எக்காரணத்தால்?; புகுந்த என் - வந்து சேர்ந்த தீமைகள் எவை?; புந்திபோய்க் காந்துகின்றது - என் அறிவு ஒரு நிலையில் நிற்காமல் எரிகின்றது; கட்டுரையீர் என்றான் - எடுத்து முறையாகக் கூறுங்கள் என்றார். வீரர் நீர் என்றதால் பெரு வீரர்களாய்க் காணப்படும் இராமலக்குவரைப் பகைவர் விரட்டியிருக்க இயலாது என எண்ணிய |