பக்கம் எண் :

சடாயு காண் படலம் 135

 அன்னம் அன்ன
     அணங்கினை நோக்கினான்;
'மன்னர் மன்னவன்
     மைந்த! இவ் வாணுதல்
இன்னள் என்ன
     இயம்புதியால்' என்றான்.

    பின்னரும் - பிறகும்; அப்பெரியவன் பெய் வளை அன்னம்
அன்ன அணங்கினை நோக்கினான் -
அப்பெரியோராம் சடாயு, அணிந்த
வளையல்களையுடைய அன்னம் போன்ற தெய்வப் பெண்ணாம் சீதையைப்
பார்த்தவராய்; மன்னர் மன்னவன் மைந்த - சக்ரவர்த்தி தயரதனின்
மகனே!; இவ்வாணுதல் இன்னள் என்ன இயம்புதியால் என்றான் - இந்த
ஒளி பொருந்திய நெற்றியை உடையவள் இன்னாள் என்று சொல்வாய்
என்றார்.

     பெரியவன் - பண்பு, கல்வி, வாழ்நாள் முதலியவற்றால் பெரியவர்.
பெய் வளை அன்னம் என்பது இல்பொருள் உவமை. அணங்கு - உருவகம்.
நோக்கினான் - முற்றெச்சம். வாள்+நுதல்=வாணுதல், ஒளிபொருந்திய
நெற்றியை உடையவள்; அன்மொழித் தொகை.                     36

2726.அல் இறுத்தன
     தாடகை ஆதியா,
வில் இறுத்தது இடை
     என, மேலைநாள்
புல் இறுத்தது யாவும்
     புகன்று, தன்
சொல் இறுத்தனன்-
     தோன்றல்பின் தோன்றினான்.

    தோன்றல் பின் தோன்றினான் - இராமனுக்குப் பின் பிறந்த
தம்பியாம் இலக்குவன்; மேலைநாள் அல் இறுத்தன தாடகை ஆதியா -
முன் நாளில், இருள் ஒரு வடிவு எடுத்து வந்தாற் போன்ற தாடகையைக்
கொன்றது முதலாக; வில் இறுத்தது இடை என - சீதையை மணக்கச்
சனகன் அவையில் வில்லை முறித்தது நடுவாக; புல் இறுத்தது யாவும்
புகன்று -
வனம் அடைந்து புல்லிற் படுத்தது ஈறாக எல்லாவற்றையும் கூறி;
தன் சொல் இறுத்தனன் - தன்னுடைய வார்த்தையை முடித்தான்.

     தாடகையுடன் கொன்றது என்ற சொல்லையும் 'புல் இறுத்தது'
என்பதுடன் ஈறாக என்ற சொல்லையும் கூட்டுக. தோன்றல் - ஆடவரில்
சிறந்தவன்; தலைவன். தாடகை - மலையில் திரிபவள். 'வில்லிறுத்தங்கு
அரிவையை மேலை நாள் புல்லுறுத்து' எனப் பாடம் கொண்டு மிதிலையில்
சிவ வில்லை முறித்து அங்குச் சீதையை மணந்து கொண்டு எனப் பொருள்