பக்கம் எண் :

136ஆரணிய காண்டம்

காண்பர். 'புல்இறுத்தது' என்பதற்குக் காட்டில் தயரதனுக்குச் சரமக்கிரியை
செய்ததென்றும் கூறுவர். 'புல் இறுத்தன யாவும் எனவும் பாடம் கொண்டு
பொருந்த உண்டான எல்லாம் எனவும் உரைப்பர்.                  37

பஞ்சவடியில் தங்கும் தன் விருப்பை இராமன் உரைத்தல்

2727.கேட்டு உவந்தனன், கேழ்
     கிளர் மௌலியான்;
'தோட்டு அலங்கலினீர்!
     துறந்தீர், வள
நாட்டின்; நீவிரும்
     நல்நுதல்தானும் இக்
காட்டில் வைகுதிர்; காக்குவென்
     யான்' என்றான்.

    கேழ் கிளர் மௌலியான் கேட்டு உவந்தனன் - ஒளி விளங்கும்
முடியுடைய சடாயு அது கேட்டு மிகவும் மகிழ்ந்தவராக; தோட்டு
அலங்கலினீர் -
பூவிதழையுடைய மாலை அணிந்தவர்களே; வள நாட்டின்
துறந்தீர் -
வளப்பமுள்ள நாட்டை விட்டு நீங்கி வந்தவர்களானீர்; நீவிரும்
நல்நுதல் தானும் இக்காட்டில் வைகுதிர் -
நீங்களும் நல்ல நெற்றியை
உடைய சீதையும் இந்த வனத்தில் தங்கி வாழுங்கள்; யான் காக்குவென்
என்றான் -
நான் உங்களை எல்லாம் காப்பேன் எனக் கூறினார்.

     சடாயு முடியுடையவர் என்பதை முன்னரே 'நீளுறு மேருவின் நெற்றி
முற்றிய வாள் இரவியின் பொலி மௌலியான்தனை (2696) எனச் சுட்டுவார்;
கழுகுக்குள்ள உச்சிக் கொண்டை போன்ற மயிர்த் தொகுதியை மௌலி என
உரைத்தார் என்பர்.

     தோடு - பூவிதழ். தந்தையாம் தயரதன் மறைந்தாலும் நாடு விட்டுக்
காடு வந்தாலும் இராமன் முதலியோர்க்குத் தாம் காவலாய் இருப்பதாகக்
கூறும் சடாயுவின் கூற்றில் தந்தையுளம் வெளிப்படுகிறது.             38

2728.'இறைவ! எண்ணி,
     அகத்தியன் ஈந்துளது,
அறையும் நல் மணி ஆற்றின்
     அகன் கரைத்
துறையுள் உண்டு ஒரு சூழல்;
     அச் சூழல் புக்கு
உறைதும்' என்றனன்-
     உள்ளத்து உறைகுவான்.