வெற்ற விண் - வேறு ஒன்றும் இல்லாத சூனியமான ஆகாயம். பகலில் விண்மீன்கள் விழுவதுகேட்டின் அறிகுறி. சூலத்தின் துண்டுகள் வானில் விண்மீன்களாக விழுந்த நிலை அரக்கர் அழிவுக்குஅறிகுறியாம். ஆசை - திக்கு. எ - டு ஆசை பத்திற்கும் (3422) அது, அவை என்பன பகுதிப் பொருள்விகுதி. 27 | 2544. | சூர் ஒடுங்கு அயில் துணிந்து இறுதல் கண்டு, சிறிதும் போர் ஒடுங்கலன், மறம்கொடு புழுங்கி, நிருதன் பார் ஒடுங்குறு கரம்கொடு பருப்பதம் எலாம் வேரொடும் கடிது எடுத்து எதிர் விசைத்து, விடலும் |
நிருதன் - அவ்வரக்கன்; சூர் ஒடுங்கு அயில் துணிந்து இறுதல் கண்டு - கொடுமை தங்கியுள்ள தன்சூலம்துண்டுபட்டு அழிந்ததைப் பார்த்தும்; சிறிதும் போர் ஒடுங்கலன் - போர் செய்தலிற்சற்றும் தளர்ச்சி இல்லாதவன் ஆகி; மறம்கொடு - வீரப்பண்பை மேற் கொண்டு; புழுங்கி - கோபத்தால் மனம் வெதும்பி; பார் ஒடுங்குறுகரம் கொடு - நிலவுலகு ஒடுக்கமுறும்படியான தன் பெரிய கைகளால்; பருப்பதம் எலாம் - மலைகளை எல்லாம்; வேரொடும் கடிது எடுத்து எதிர் விசைத்து விடலும் வேரோடு விரைவாகப் பிடுங்கி எடுத்துஇராமனுக்கு எதிராக வேகமாக எறிந்ததும். தன் சூலப்படை இராமன் அம்பால் துண்டுபடினும் பின் வாங்காமல் போர் புரிந்தான். சூர்என்பதற்குத் தேவர், வஞ்சம், கொடுந் தெய்வம் எனப்பல பொருள் கூறுவர். பருப்பதம் -பர்வதம். 28 | 2545. | வட்டம் இட்ட கிரி அற்று உக, வயங்கு வயிரக் கட்டு அமைந்த கதிர் வாளி, எதிரே கடவலால், விட்ட விட்ட மலை மீள, அவன் மெய்யில், விசையால் பட்ட பட்ட இடம் எங்கும், உடல் ஊறுபடலும் |
வட்டம் இட்ட கிரி அற்று உக - விராதன் எறிந்த சூழ்ந்து வரும் மலைகள் பிளவுபட்டு விழுமாறு; (இராமன்) வயங்கு வயிரக் கட்டு அமைந்த கதிர்வாளி எதிரே கடவலால் - விளங்குகின்ற உறுதியான கட்டுப் பொருந்தியஒளிமிக்க அம்புகளை (விராதனுக்கு) எதிராக எய்தலால்; விட்ட விட்ட மலை |