சிரிப்பின் வெண்ணிற இளங் குருத்து மேல் தோன்றுகிறது என்று தோன்றச் சிரித்த கரிய மேகம் போன்ற இராமன் ஒரு விளையாட்டை மேற்கொண்டான்; நங்கை - பெண்ணே!; வருத்தம் நீங்கு அரக்கர் தம்மில் மானிடர் மணத்தல் பொருத்தம் அன்று - துன்பமில்லாத இராக்கதரோடு மனிதர் திருமணம் புரிதல் இயைபுடையதன்று; என்று சாலப் புலமையோர் புகல்வர் என்றான் - என மிகுந்த அறிவுடையோர் சொல்லுவர் எனக் கூறினான். அருத்தியள் - இரப்போள் எனப் பொருள்படும். குருத்து - இளம் கொழுந்து இது இளவொளியுடைமையைக் குறிக்கும் மானிடர் - காசிப முனிவரின் மனைவிமார்களில் மனு என்பவளிடம் பிறந்தவர் என்பதைக் குறிக்கும் சொல் என்பர். அரக்கியை மானிடர் மணப்பதற்குக் கணப் பொருத்தம் தடையாகும். சிரிப்பைப் பெரிதும் வெளிப்படுத்தாமல் மெல்லிய இயல்பிற்கேற்ப அகத்துறு நகையாக வெளிப்பட்டதைக் குறிக்கும். சூர்ப்பணகையின் பேதமை கருதி இங்கு இராமனிடம் நகை தோன்றியது. கோபம் கொண்டு அவளைத் துரத்தி விடாமல் உடன்படல், மறுத்தல் எனும் இரு தன்மை உடையவன் போல் வெவ்வேறு காரணங்களைக் கூறிப் பேச்சை வளர்ப்பதைக் குறிக்கும் 'உண்டாட்டம் கொண்டான்' எனும் தொடர். குருத்து - இலக்கணை. நீலக்கொண்டல் - உவம ஆகுபெயர். 51 | 2783. | 'பராவ அருஞ் சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது, "இராவணன் தங்கை" என்றது ஏழைமைப் பாலது' என்னா, 'அரா-அணை அமலன் அன்னாய்! அறிவித்தேன் முன்னம்; தேவர்ப் பராவினின் நீங்கினேன், அப் பழிபடு பிறவி' என்றாள். |
அரா அணை அமலன் அன்னாய்! - பாம்பணை மீது பள்ளி கொள்ளும் குற்றமற்ற திருமாலைப் போன்றவனே!; பராவ அரும் சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது - விரித்துக் கூறுவதற்கு அரிய சிரத்தை என்னும் ஊக்கம் நிரம்பிய பத்தியால் நான் பெற்ற நல்ல பயனை உணராமல்; இராவணன் தங்கை என்றது ஏழைமைப் பாலது என்னா - நான் இராவணனின் தங்கை எனும் ஒரு காரணத்தைக் காட்டி மறுப்பது உன் அறியாமையில் நிகழ்ந்தது என்று கூறி; அப்பழி படுபிறவி - அரக்கர் பிறவியாம் அப்பழிக்கத்தக்க பிறப்பை; தேவர்ப் பராவினின் நீங்கினேன் - தேவர்களை வணங்கித் துதித்ததால் நீங்கி விட்டேன் (இதனை) முன்னம் அறிவித்தேன் என்றாள் - முன்னமே தெரிவித்துள்ளேன் என்று சூர்ப்பணகை சொன்னாள். சிரத்தை ஆரும் பத்தி - சிரத்தையோடு கூடின பத்தி. பழிபடு பிறவி - பாவம் செய்ததால் உண்டான பிறப்பு. ஏழைமைப் பாலது - ஆராய்ச்சி இல்லாததால் உண்டானது என்பதுமாம். அல்லாமல், சூர்ப்பணகை தான் தவத்தால் பெற்ற மரபு வேறுபாட்டை மறந்து 'இராவணன் தங்கை எனக் கூறியது தன் பேதமைப்பாலது என்பதும் ஆம். தன் மரபு மாற்றத்தை |