| | ஒளிக்கல் ஆம் இடம் யாது?' என, உன்னுமால். |
அளிக்கும் மெய் உயிர் காந்து அழல் அஞ்சினள் - அன்போடு காக்கப்படும் உடம்பையும் உயிரையும் சுட்டெரிக்கும் நெருப்பைக் கண்டு பயந்தவளாகி; குளிக்கும் நீரும் கொதித்து எழ(க்) கூசுமால் - அவ்வெப்பம் தணியத் தான் குளிப்பாளாக அந்த நீரும் தன் காம வெப்பத்தால் கொதித்துப் பொங்கி வரக் குளிப்பதற்குக் கூச்சம் அடைவாள்; விளிக்கும் வேலையை - பேரொலியால் தன்னைத் துன்புறுத்தும் கடலை; வெங்கண் அனங்கனை - கொடிய மன்மதனை; ஒளிக்கல் ஆம் இடம் யாது என உன்னும் - மறைத்து வைக்கும் இடம் எது எனக் கருதுவாள்; ஆல் - அசை. காந்து அழல் பற்றிய விளக்கம் அடுத்த பாடலில் (2811) வெந்து காந்த வெதும்புறு மேனியாள் 'எனக் காணலாம் விளித்தல் பேரொலி செய்தல். வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்' எனும் பெரும்பாணாற்றுப்படை வரி (300) இத்துடன் எண்ணத்தக்கது. முன்னர் இக்காண்டத்திலேயே சிந்தையில் உறைபவற்கு உருவம் தீய்ந்ததால் (2743) எனக் குறித்தமை காண்க. அதனால் அநங்கன் - உருவற்றவன் ஆனான். மன்மதன், சிவனால் எரியுண்ட கதை ஈண்டு நினைத்தற்குரியது. இங்குச் சூர்ப்பணகை காமத் தீயால் வேகின்றமை குறிப்பு. காமத்தீ சுட்டெரிப்பதை 'வீரமில் கேள்வனுறீஇய காமத் தீ நீருட் புகினும் சுடும்' (கலி. 144. 61-62) என்ற வரிகளுடன் ஒப்பிடற்குரியது. 79 | 2811. | வந்து கார் மழை தோன்றினும், மா மணிக் கந்து காணினும், கைத் தலம் கூப்புமால்; இந்துகாந்தத்தின் ஈர நெடுங் கலும் வெந்து காந்த, வெதுப் புறு மேனியாள். |
இந்து காந்தத்தின் ஈர நெடுங்கலும் - சந்திர காந்தம் எனும் குளிர்ந்த பெரும் கல்லும்; வெந்து காந்த வெதுப்புறு மேனியாள் - தன் மேல் படச் சூடுண்டு கருகும் வண்ணம் வெப்பமுற்ற உடலை உடைய சூர்ப்பணகை; கார் மழை வந்து தோன்றினும் - கரிய மேகம் தன் முன்னே வந்து தென்பட்டாலும்; மாமணிக் கந்து காணினும் - நீல மணியால் ஆகிய தூணை எதிரே கண்டாலும்; கைத்தலம் கூப்பும் - கைகுவித்து வணங்குவாள்; ஆல் - அசை. இந்து காந்தம் - சந்திர காந்தம் எனும் ஒருவகைக்கல். இது சந்திரனின் முன்னே நீரை உமிழும் தன்மையுடையது. கந்து - தறி எனவும் கூறுவர். கார் மழையையோ நீலக்கந்துவையோ கண்டதும் கை தொழக் காரணம் அவற்றைக் கண்டதும் இராமனைக் கண் முன்னே கண்ட மெய்ப்பாட்டை |