கைகளை வெட்டி வீழ்த்துவோம் என்று; முந்து கடுகி படர் புயத்து ஏற - அவன் முன் விரைந்துசென்று அவனுடைய பரந்த தோள்களின் மீது ஏற; நிருதன் - அரக்கனாம் அவ் விராதன். வரம் பெற்ற விராதன் இறவாததால் இராமலக்குவர் வாளால் அவன் தோளை வெட்ட அவன் மீதுஏறினர். இருவர் கோபத்தை வாளின் மீது ஏற்றிக் கூறப்பட்டது என்பர். சினம் - போர் எனவும்கூறுவர். எய்வில் என்பதற்கு அம்புகளை எய்யும் வில்லுடைய என்றுமாம். 34 | 2551. | உண்டு எழுந்த உணர்வு அவ்வயின் உணர்ந்து முடுகி, தண்டு எழுந்தனைய தோள்கொடு சுமந்து, தழுவி, பண்டு எழும் தனது வன் கதி பதிற்றின் முடுகிக் கொண்டு எழுந்தனன் - விழுந்து இழி கொழுங் குருதியான். |
விழுந்து இழி கொழுங் குருதியான் - கீழே விழுந்து பெருகி வழியும் மிகுந்த இரத்தத்தை உடையவனாகி; அவ்வயின் உண்டு எழுந்தஉணர்வு உணர்ந்து - அவ்விடத்தில் மீண்டும் எழும் உணர்ச்சி அடைந்தவனாகி; முடுகித்தண்டு எழுந்தனைய தோள்கொடு தழுவிச் சுமந்து - விரைந்து தண்டாயுதம் போன்ற தன்தோள்களைக் கொண்டு இராமலக்குவரை அணைத்துத் தூக்கி; பண்டு எழும் தனதுவன்கதி(ப்)பதிற்றின் முடுகி - பழமையில் தன்னிடம் உண்டாகும் வலிய வேகத்தில்பதின்மடங்கு விரைவு கொண்டு; கொண்டு எழுந்தனன் - மேற்கொண்டு எழும்பியவனாய் இரத்த ஆறு பெருகிட உணர்வு சோர்வுற்ற விராதன் மீண்டும் உணர்வுற்று இராமலக்குவரைத் தன்தோளில் சுமந்து விரைந்து சென்றனன். தண்டு - தண்டம் என்பதன்திரிபு. 35 | 2552. | முந்து வான் முகடு உறக் கடிது முட்டி முடுகிச் சிந்து சோரியொடு சாரிகை திரிந்தனன் அரோ- வந்து மேருவினை நாள்தொறும் வலம்செய்து உழல்வோர், இந்து சூரியரை ஒத்து, இருவரும் பொலியவே. |
|