மேருவினை நாள் தொறும் வலம் செய்து வந்து உழல்வோர் இந்து சூரியரை ஒத்து - மேருமலையைத் தினமும் வலமாகச் சுற்றித் திரிபவர்களாம் சந்திர சூரியர்களைப் போன்று; இருவரும் பொலிய - இராமலக்குவர் அவன் தோள்கள் மீது விளங்க; முந்து வான் முகடு உற - மேல் உள்ள வானத்தின் உச்சியைப் பொருந்த; கடிது முட்டி - வேகமாக முட்டிக்கொண்டு; சிந்து சோரியொடு - வழியும் இரத்தத்தோடு; முடுகிச் சாரிகை திரிந்தனன்- (விராதன்) வேகமாக வட்ட மிட்டுச் சுற்றினான். அரோ - அசை; ஏ - ஈற்றசை. மேருமலை அரக்கனுக்கும், சந்திர சூரியர் இராமலக்குவர்க்கும் உவமை. சந்திர சூரியர்மேருவை வலமாகச் சுற்றுதல் என்பது புராண மரபு. முந்து வான் என்பதை மற்றப் பூதங்களுக்கு முன்வைத்துஎண்ணப் பெறும் வானம் என்றுமாம். 36 | 2553. | சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் விசை தோய் அவண விண்ணிடை நிமிர்ந்து படர்கின்றவன், அறம் சிவண, தன்ன சிறைமுன் அவரொடு, ஏகு செலவத்து உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனன் அரோ. |
சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் - பொன் நிறமுள்ள இலக்குவனோடு இராமன் விளங்கிய தோளை உடைய விராதன்; விசைதோய் - வேகமிக்கு; அவண விண்ணிடை நிமிர்ந்து படர்கின்றவன் - அப் புறத்ததான ஆகாயத்தில்எழுந்து செல்கின்றவனாம் அவ் வரக்கன்; அறம் சிவணது அன்ன - தருமம் வடிவெடுத்ததைப் போன்ற; சிறை - இறக்கைகளோடு; முன் அவரொடு ஏகு செலவத்து - முன்னம் பலராமன்கண்ணனொடு செல்கின்றதை உடைய; உவ ணன் என்னும் நெடுமன்னவனும் ஒத்தனன் - கருடன்என்னும் சிறப் புடை மன்னவனைப் போன்று விளங்கினான். இங்கு விராதனைக் கருடனாகவும் இராமலக்குவரைப் பலராமன் கண்ணனாகவும் உவமிக்கப்பெற்றுளது. கருடன் தருமத்தின் வடிவு என்பர். இராமனைக் கண்ணன் என்றது கருணை உடையவன் என்பதுகுறித்துமாம். இராமலக்குவர் முன்னவதாரம். கண்ணன், பலராமன், பின்னவதாரம்; இவ்வாறுகூறுதல் கவி மரபு. சுவண வண்ணன் - பொன் வண்ணனாம் சிவனைக் குறிப்பர் சிலர். அப்போதுசங்கர நாராயணன் உவமை ஆவர். 37 | 2554. | மா தயா உடைய தன் கணவன், வஞ்சன் வலியின் |
|