பக்கம் எண் :

24ஆரணிய காண்டம்

 போதலோடும் அலமந் தனள்;
     புலர்ந்து, பொடியில்,
கோதையோடும் ஓசி கொம்பு என,
     விழுந்தனள் குலச்
சீதை, சேவல் பிடியுண்ட சிறை
     அன்னம் அனையாள்.

    குலச்சீதை - உயர்குலத்துதித்த சீதை; மா தயா உடைய தன்
கணவன் வஞ்சன் வலியின் போதலோடும் -
பெருங்கருணை பூண்ட தன்
துணைவனாம் இராமன் வஞ்சம் செய்த விராதனின் வலிமைக்குட்பட்டுத்
தூக்கிச் செல்லும்போது; அலமந்தனள் - வாடிக் கலங்கினாள்; புலர்ந்து
சேவல்பிடியுண்ட சிறை அன்னம் அனையாள் -
வாட்டமடைந்து
ஆணன்னம் பிறரால் பிடிபட மென் சிறகுள்ளபெண் அன்னம்
போன்றவளாய்; பொடியில் கோதையோடும் ஓசி கொம்பு என
விழுந்தனள் -
புழுதியில் கூந்தலொடு துவளும் பூங்கொம்பு போல
விழுந்தாள்.

     தன் கூந்தல் புழுதியில் புரளப் பூங்கொம்பு போல் சீதை விழுந்தாள்.
குலம் - நிமிகுலம்.சனகன் யாகசாலை அமைக்க நிலத்தை உழுதபோது
உழுபடைச் சாலில் கிடைத்ததால் சீதைஎனப்பட்டாள். சேவல் - ஆண்
அன்னம், கோதை - கூந்தல். கோதையோடும் ஓசிகொம்பு -காற்றினால்
அசையும் பூங் கொம்பு எனவும் கொள்வர்.                         38

2555. பின்னை ஏதும் உதவும் துணை பெறாள்;
     உரை பெறாள்;
மின்னை ஏய் இடை நுடங்கிட
     விரைந்து தொடர்வாள்;
‘அன்னையே அனைய அன்பின்
     அறவோர்கள்தமை விட்டு
என்னையே நுகர்தி’ என்றனள்-
     எழுந்து விழுவாள்.

    எழுந்து - மீண்டும் (சீதை) எழுந்து; உதவும் துணை பின்னை ஏதும்
பெறாள் -
தனக்கு உதவிடும் துணைவேறு ஒன்றும் பெறாதவளும்;
உரைபெறாள் - ஆறுதல் கூறும் மொழி ஒன்றும் பெறாதவளும் ஆகி;
மின்னைஏய் இடை நுடங்கிட விரைந்து தொடர்வாள் - மின்னலைப்
போன்ற இடை துவண்டிடவேகமாய் விராதனைத் தொடர்ந்தவள்;
அன்னையே அனைய அன்பின் அறவோர்கள் தமைவிட்டு -தாய்
போன்று பிறரிடம் அன்பு காட்டும் அறவோராம் இராமலக்குவரை விட்டு
விட்டு; என்னையே நுகர்தி என்றனள் - என்னை நீ கொண்டு போய்
உண்ணுக என்று கூறினளாய்; விழுவாள் - (அவன்முன்) மீண்டும் விழுவாள்.