இராமலக்குவர் அறவோர் ஆதலால் அவர்களால் உலகம் நலம் பெறும் என்பதால் அவர்களைவிட்டு விட்டுத் தன்னை உண்ணுமாறு கேட்கிறாள் சீதை. மின்னலின் ஒளியும். தனக்கெனத் தனிஉருவின்மையும் சீதை இடைக்கு உவமையாகக் காரணமாயின. உரை பெறாள் என்பதால் காட்டில் சீதைதனித்த அபலையாய் உள்ள அவல நிலை புலப்படும். 39 | 2556. | அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி அலையா எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து இளையவன் தொழுது ‘தேவி துயர் கூர விளையாடல் தொழிலோ? பழுது வாழி’ என ஊழி முதல்வன் பகர்வுறும்: |
வாய் குழறி அழுது - வாய்ச் சொற்கள் குழறி அழுது, ஆர்உயிர் அழுங்கி - அரிய உயிர் வருந்தி; அலையா -அலைந்து, எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து - ஓவியத்தில் எழுதும் பதுமை போன்ற சீதையின் துன்பநிலையை அறிந்து; இளையவன் - இலக்குவன்; தொழுது - இராமனைவணங்கி; வாழி - நீர் வாழ்க; தேவி துயர்கூர - சீதை இவ்வாறு பெருந்துயரில்வருந்த; விளையாடல் தொழிலோ - விளையாட்டாக எண்ணி இருப்பது நன்றோ? பழுது - இது குற்றம்; என - என்று கூற; ஊழி முதல்வன் பகர்வுறும் - பல உலகத்தைத்தோற்றுவித்தவனாகிய இராமன் கூறத் தொடங்குவான். சீதையின் அவல நிலை கண்டு இலக்குவன் இராமனிடம் ‘இவ்வாறு விளையாடலாமா?’ எனக்கூறினான். எழுது பாவை - அசையாது இருத்தலுக்கு உவமை. எனவே சீதை மூர்ச்சித்து விழுந்தாள்என்பர். பெரியோரிடம் பேசுமுன் கூறும் மரியாதை மொழி ‘வாழி’ என்பதாம். இனிப்பழுது எனக் கூறியமையைப் பொறுத்துக் கொள்ளுமாறு ‘வாழி’ என்று கூறினான் எனலுமாம். ஊழி முதல்வன் என்பதால்இராமனின் முதன்மை நிலை புலப்படும். 40 | 2557. | ‘ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி, இனிதின் போகல் நன்று என நினைந்தனென்; இவன், பொரு இலோய்! சாகல் இன்று பொருள் அன்று, என நகும் தகைமையோன், வேக வெங் கழலின் உந்தலும், விராதன் விழவே, |
|