பக்கம் எண் :

252ஆரணிய காண்டம்

அவரனைவரும் அன்றே இறந்தொழிவதற்குக் காரணமாவது குறித்து அந்தக்
கதறல் இராக்கத அழிவுக் குறிப்பாக யமன் அறைவித்த பறைபோலுமென்றது
தன்மைத் தற்குறிப்பேற்றவணி. பின்னிரண்டடி; உவமையணி. இடிக்கு
அழிதல் நாகத்தின் இயல்பு. அரோ - ஈற்றசை.                       2

2877.வாக்கிற்கு ஒக்க, புகை
     முந்து வாயினான்
நோக்கி, 'கூசலர், நுன்னை
     இத் தன்மையை
ஆக்கிப் போனவர் ஆர்கொல்?'
     என்றான்-அவள்
மூக்கின் சோரி முழீஇக்
     கொண்ட கண்ணினான்.

    அவள் மூக்கின் சோரி - அந்தச் சூர்ப்பணகையின் மூக்கிலிருந்து
வடிந்த இரத்தத்தில்; முழீஇக் கொண்ட - மூழ்கடிக்கப்பட்ட; கண்ணினான்
-
கண்களையுடையவனும்; வாக்கிற்கு ஒக்க - (தன் வாயிலிருந்து பிறக்கும்)
சொற்களுக்கு ஒத்தபடி; புகை முந்து வாயினான் - புகை முந்தி
வெளிப்படுகின்ற வாயையுடையவனுமான கரன்; நோக்கி - (அந்தச்)
சூர்ப்பணகையைப் பார்த்து; கூசலர் - கூச்சமில்லாதவர்களாய்; நுன்னை -
உன்னை; இத் தன்மையை ஆக்கிப் போனவர் - இவ்வாறு
அலங்கோலப்படுத்திச் சென்றவர்; ஆர் கொல் என்றான் - யார் என்று
கேட்டான்;

     வாக்கிற்கு ஒக்க புகை - அவனது வாயிலிருந்து பின் வந்த பேச்சாகிய
தீக்கு ஒப்ப, முன் எழுந்து வந்தது புகை.

     இன்னாரென்று அறியாததால் 'போனவர்' என்று பன்மையால்
கூறினான்; துணியலாகாத இடத்துப் பன்மையால் கூறுதல் மரபு. முழீஇ -
சொல்லிசையளபெடை.                                          3

2878.'இருவர் மானிடர்;
     தாபதர்; ஏந்திய
வரி வில், வாள், கையர்;
     மன்மதன் மேனியர்;
தரும நீரா;
     தயரதன் காதலர்;
செருவில் நேரும்
     நிருதரைத் தேடுவார்.

    இருவர் மானிடர் - (அதுகேட்ட சூர்ப்பணகை) இரண்டு மனிதர்கள்;
தாபதர் - தவ வேடத்திலிருக்கும் முனிவர்கள்; ஏந்திய வரிவில் வாள்
கையர் -
தரித்த கட்டமைந்த வில்லும் வாளுமுடைய கையினர்; மன்மதன்
மேனியர்-