பக்கம் எண் :

கரன் வதைப் படலம் 253

மன்மதனைப் போன்ற அழகான வடிவுடையவர்கள்; தரும நீரர் -
தருமநெறியில் நடப்பவர்கள்; தயரதன் காதலர் - தசரதச் சக்கரவர்த்தியின்
மைந்தர்கள்; செருவில் நேரும் - போரில் எதிர்ப்படும்; நிருதரைத்
தேடுவார் -
அரக்கர்களைத் தேடித் திரிந்து கொண்டிருப்பவர்;

     மரவுரியுடுத்தமையும் சடைமுடி தரித்தமையும் பற்றித் 'தாபதர்'
என்றாள். தரும நீரர் - இராமலக்குவரின் பேரழகும், பெருங்குணமும்
விளங்கும்.                                                    4

2879.'ஒன்றும் நோக்கலர் உன் வலி;
     ஓங்கு அறன்
நின்று நோக்கி, நிறுத்தும்
     நினைப் பினார்;
"வென்றி வேற் கை
     நிருதரை வேர் அறக்
கொன்று நீக்குதும்" என்று
     உணர் கொள்கையார்.

    உன் வலி - உனது வலிமையை; ஒன்றும் நோக்கலர் - சிறிதும்
கருதுகின்றார்களில்லை; ஓங்கு அறன் நின்று நோக்கி - மேலான தரும
வழிகளில் தாமும் நின்று ஆராய்ந்து; நிறுத்தும் நினைப்பினார் - அத்
தருமத்தை எங்கும் நிலைபெறச் செய்யும் கருத்துடையவர்; வென்றி வேல்
கை நிருதரை -
வெற்றி தரும் வேலேந்திய கைகளையுடைய அரக்கரை;
வேர் அற - அடியோடு; கொன்று நீக்குதும் - 'கொன்று தொலைப்போம்';
என்று உணர் - என்று தீர்மானித்துள்ள; கொள்கையார் - கோட்பாடு
உடையவர்கள்.

     அவர்கள் உன்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை; அறமாகிய
பயிரைச் செழிக்க வைக்க அதற்குப் பகைவர்களான அரக்கர் என்னும்
களைகளை வேரோடு அழித்துக் களையும் துணிவினர் என்றாள்
சூர்ப்பணகை என்பது.

     இங்கே 'தாபதர் அறம் நிறுத்தும் நினைப்பினர்; உன் வலி நோக்கலர்;
இச் செய்தி முன் கூறப்பட்டுள்ளது என்று வேண்டாத செய்திகளை
முற்கூறியது கரனின் வெறுப்பையும் கோபத்தையும் தூண்டுதற்காகஎனலாம். 5

2880.'மண்ணில், நோக்க அரு
     வானினில், மற்றினில்,
எண்ணி நோக்குறின்,
     யாவரும் நேர்கிலாப்
பெண்ணின் நோக்குடையாள்
     ஒரு பேதை, என்
கண்ணின் நோக்கி உரைப்ப
     அருங் காட்சியாள்;