| கால பாசம், கதை, பொரும் கையினார்; வேலை ஞாலம் வெரு வுறும் ஆர்ப் பினார்; ஆல காலம் திரண்டன்ன ஆக்கை யார். |
(அந்த அரக்கர்கள்) சூலம் வாள் மழு தோமரம் சக்கரம் கால பாசம் கதை பொரும் கையினார் - சூலம் முதல் கதை வரையுள்ள போர்ப் படைகளால் போர் செய்யும் கைகளையுடையவர்கள்; வேலை ஞாலம் - கடல் சூழ்ந்த இவ்வுலகத்து உயிர்கள் யாவும்; வெருவுறும் ஆர்ப்பினார் - அஞ்சத்தக்க ஆரவாரம் உடையவர்கள்; ஆலகாலம் திரண்டன்ன - ஆலகாலம் என்ற நஞ்சு உருவெடுத்து வந்தாற்போன்ற; ஆக்கையார் - உடலையுடையவர்கள். கையினார், ஆர்ப்பினார், ஆக்கையார் 'ஏழினோடு ஏழனார்' என்ற அடைமொழியோடு (2884) கூட்டுக. சூலம் - முத்தலைவேல்; மழு - கோடரி; தோமரம் - இரும்புலக்கை; காலபாசம் - கயிற்றாலான ஒரு போர்க்கருவி; கதை - தண்டாயுதம் ஆலகாலம் - கரிய நிறத்திற்கும் கொடுஞ்செயலுக்கு உவமை. ஞாலம் - ஆகுபெயர். 11 2886. | வெம்பு கோபக் கனலர் விலக்கினார், 'நம்பி! எம் அடிமைத் தொழில் நன்று' எனா, 'உம்பர்மேல் இன்று உருத்தனை போதியோ? இம்பர்மேல் இனி யாம் உளெமோ?' என்றார், |
வெம்பு கோபக் கனலர் - கொதிக்கின்ற கோபத் தீயையுடைய அந்த அரக்கர்கள்; (கரனை நோக்கி) நம்பி - சிறந்த தலைவனே!; எம் அடிமைத் தொழில் நன்று - எங்களது அடிமைத் தொழில் நன்றாக இருந்தது; எனா - என்று தம்மை இகழ்ந்தவர்களாய்; இன்று உம் பர்மேல் - இப்பொழுது தேவர்கள் மேல்; உருத்தனை போதியோ - கோபித்துப் போர் செய்யப் போகிறாயோ (அப்படி இல்லையே இவ்வாறு நீ மனிதரோடு போருக்குச் சென்றால்); இனி இம்பர்மேல் - இனி இந்தவுலகத்தில்; யாம் உளெமோ - நாங்கள் உயிரோடு வாழ்பவர்களாவேமோ?; - என்றார் விலக்கினார் - என்று சொல்லி (க்கரனைப் போருக்குச் செல்லாதபடி) தடுத்தார்கள். 'எம் அடிமைத் தொழில் நன்று' - நாங்கள் உனக்கு அடியவர்களாய் நீ இட்ட கட்டளையை ஏற்றுச் செய்வதற்குப் பணியாளராகக் காத்திருக்க, நீ |