பக்கம் எண் :

258ஆரணிய காண்டம்

எங்களுக்கு எந்தவிதக் கட்டளையுமிடாமல் நேரே போருக்குச் சென்றால்
எங்கள் அடிமைத் திறம் என்ன பயனைத் தரும்? என்பது; இகழ்ச்சிக்
குறிப்பு. நம்பி - அண்மை விளி.                                12

2887.'நன்று சொல்லினிர்; நான்
     இச் சிறார்கள்மேல்
சென்று போர் செயின்,
     தேவர் சிரிப்பரால்;
        பொன்று, சோரி குடித்து,
     அவர் கொள்கையை
வென்று, மீளுதிர்
     மெல்லியலோடு' என்றான்.

    நன்று சொல்லினிர் - நன்றாகச் சொன்னீர்கள்; நான் இச்சிறார்கள்
மேல் -
இந்த மானிடச் சிறுவர்களையெதிர்த்து; சென்று போர் செயின் -
போய்ப் போர் புரிந்தால்; தேவர் சிரிப்பர் - தேவர்கள் நம்மை இகழ்ந்து
சிரிப்பார்கள்; கொன்று சோரி குடித்து - (ஆதலால்) நீங்கள் சென்று
அவர்களைக் கொன்று அவர்களின் இரத்தத்தைப் பருகி; அவர்
கொள்கையை வென்று -
அவர்கள் கொண்ட கோட்பாட்டைச் சிதைத்து
வெற்றி கொண்டு; மெல்லியலோடு மீளுதிர் - அவர்களிடமுள்ள
மென்மைத் தன்மையுடைய பெண்ணோடு திரும்பி வாருங்கள்; என்றான் -
என்று அந்த வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

     நன்று சொல்லினிர் - தக்கதையே சொன்னீர்கள் என்பது. அவர்
கொள்கை : அரக்கர்களைக் கொன்று அறத்தைக் காப்பது என்ற
அவர்களின் கோட்பாடு. நிலவுலகில் நிகழும் போரை வானத்திலிருந்து
காணுதல் தேவர்தம் இயல்பு. ஆல் : ஈற்றசை.                       13

2888. என்னலோடும், விரும்பி
     இறைஞ்சினார்;
சொன்ன நாண்இலி
     அந்தகன் தூது என,
அன்னர் பின்
     படர்வார் என, ஆயினார்;
மன்னன் காதலர்
     வைகு இடம் நண்ணினார்.

    என்னலோடும் - என்று கரன் உத்தரவிட்ட அளவிலே; விரும்பி
இறைஞ்சினார் -
மகிழ்ச்சியோடு அவனை வணங்கி; சொன்ன நாண்
இலி-
இராமலக்குவர்களைப் பற்றிச் செய்தி கூறின வெட்கங் கெட்டவளான
சூர்ப்பணகையை; அந்தகன் தூது என - யமன் அனுப்பிய தூதாக