பக்கம் எண் :

கரன் வதைப் படலம் 259

முன்னிட்டுக் கொண்டு; அன்னர் பின் படர்வார் என ஆயினார் -
அவள் பின்னே செல்பவராகி; மன்னன் காதலர் - தசரத மன்னனின்
குமாரர்கள்; வைகு இடம் நண்ணினார் - தங்கியிருந்த இடத்தைச்
சேர்ந்தார்கள்.

     சூர்ப்பணகை வழிகாட்டிக் கொண்டு முன்னே செல்ல அவளைத்
தொடர்ந்து பின்னே அரக்கர்கள் சென்றதற்கு, தம்மைப் பரலோகத்திற்கு
அழைத்துப் போதற்பொருட்டு யமன் அனுப்பிய தூதன் முன்னே செல்ல
பின்னே அவன் காட்டும் வழியிலே தொடர்ந்து செல்லுதலை
உவமையாக்கினார். தற்குறிப்பேற்றவணி.

     'சொன்ன நாண் இலி' என்பதைச் சொன்னம் நாண் இலி எனப் பிரித்து
சொர்ணமயமான மங்கல நாணில்லாத விதவையான சூர்ப்பணகையென்றும்
உரைக்கலாம்.

     நாணிலி என்றது அவள் வெட்கமில்லாமல் தகாத முறையில் காதல்
கொண்டது குறித்தும், அவர்கள் தனக்கு இழைத்த கேட்டையும்
அவமானத்தையும் கருதாமல் பெண்களுக்குரிய நாணமின்றி அவர்களைப்
புகழ்ந்து பாராட்டியதைக் கருதியும் கூறியது.                       14

சூர்ப்பணகை இராமனைச் சுட்டிக் காட்டுதல்

2889.துமிலப் போர் வல்
     அரக்கர்க்குச் சுட்டினாள்,
அமலத் தொல் பெயர்
     ஆயிரத்து ஆழியான்
நிமலப் பாத நினைவில்
     இருந்த அக்
கமலக் கண்ணனை,
     கையினில் காட்டினாள்.

    அமலத் தொல் பெயர் ஆயிரத்து - குற்றமற்ற பழமை வாய்ந்த
ஆயிரந் திருநாமங்களையுடைய; ஆழியான் - சக்கரப் படையேந்திய
திருமாலின்; நிமலப் பாத நினைவில் இருந்த - குற்றமற்ற திருவடிகளைத்
தியானித்த நிலையில் இருந்த; அக் கமலக் கண்ணனை - செந்தாமரை
மலர் போன்ற கண்களையுடைய அந்த இராமனை; துமிலப் போர்வல்
அரக்கர்க்கு -
ஆரவாரத்தோடு போர் செய்வதில் வல்ல அந்த
இராக்கதர்களுக்கு; கையினில் சுட்டினாள் காட்டினாள் - (சூர்ப்பணகை)
தன் கையால் சுட்டிக் காண்பித்தாள்.

     ஆழியான் - சக்கராயுதம் கொண்ட திருமால்; இங்கே அரங்கநாதன் :
இராமன் குல தெய்வம். இராமன் அரங்கநாதனைத் தியானித்து
வணங்கினான். 'கோதறு தவத்துத் தம்குலத்துளோர் தொழும், ஆதியஞ்
சோதியை அடி வணங்கினான்' (1208) - ஐயனும் அச்சொற் கேளா ஆயிரம்
மௌலியானைக் கைதொழுது' - (1576) என்று கூறப்பட்டுள்ள
செய்திகளையும் 'பணி அரங்கப் பெரும்பாயற் பரஞ்சுடரை யாம் காண,
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார் (638) என்று
கூறப்பட்டுள்ள செய்தியையும் இணைத்து