நோக்கினால், இராமன் வழிபட்டது அரங்கநாதப் பெருமானையே என்பது தெளிவாகும். அமலப் பெயர் : தன்னை உச்சரித்தவரின் கருமங்களையொழிக்கும் திருநாமம். துமிலம் : பேராரவாரம், போர்க்குழப்பம். இப்பாடல் இராமனின் தவநிலையையும் அரக்கரின் அவநிலையையும் ஒரு மிக்கக் கூறியவாறு காணலாம். 15 | 2890. | 'எற்றுவாம் பிடித்து; ஏந்துதும்' என்குநர், 'பற்றுவாம் நெடும் பாசத்தின்' என்குநர், 'முற்றுவாம் இறை சொல் முறையால்' எனா, சுற்றினார் - வரை சூழ்ந்தன்ன தோற்றத்தார். |
பிடித்து எற்றுவாம் - (இந்த மனிதர்களைப்) பிடித்து மோதுவோம்; (பிடித்து) ஏந்துதும் - (அவர்களைக்) கையிலே பிடித்து ஏந்திக் கொள்வோம்; என்குநர் - என்று சொல்பவர்களும்; நெடும் பாசத்தின் - நீண்ட காலபாசம் என்னும் கயிற்றுச் சுருக்கால்; பற்று வாம் என்குநர் - பிடித்துக் கட்டுவோம் என்று சொல்பவர்களும்; இறை சொல் முறையால் - நம் தலைவனான கரன் சொன்னவாறு; முற்றுவாம் எனா - அந்தச் செயலைச் செய்து முடிப்போம் என்றும் சொல்லி; வரை சூழ்ந்தன்ன தோற்றத்தார் - மலைகள் பல சூழ்ந்து நின்றாற் போன்ற தோற்றம் உடையவர்களாய்; சுற்றினார் - (இராமன் இருந்த இடத்தைச்) சூழ்ந்து கொண்டார்கள். எற்றுவாம் பிடித்து ஏந்துதும் என்றது - பந்துகளைக் கொண்டு விளையாடுவது போல இராமலக்குவர்களை எற்றிப் பிடித்து ஏந்திப் போர் செய்வோம் என எளிதாகக் கருதிக் கூறியது. பிடித்து : மத்திம தீபம் (நடுவில் இருந்து இரு பக்கமும் விளக்குகின்ற இடைநிலை விளக்கு). 16 இராமன் போருக்கு எழுதல் | 2891. | ஏத்து வாய்மை இராமன், இளவலை, 'காத்தி தையலை' என்று, தன் கற்பகம் |
|