| | பொறியின், கான் எங்கும் வெங் கனல் பொங்கவே. |
தறியின் நீங்கிய - (மதத்தால்) கட்டுத்தறியிலிருந்து வெளிப்பட்டவையும்; குறிகொளா - (எவரையும்) ஒரு பொருட்டாக மதியாதவையுமான; தாழ் தடக்கைத் துணை - தாழ்ந்து தொங்குகின்ற பெரிய இரண்டு துதிக்கைகளையுடைய; மதவேழக் குழு அனார் - மதங் கொண்ட யானைக் கூட்டத்தை ஒத்தவர்களாகிய அரக்கர்களின்; செறியும் வாளொடு வாள் - அடர்ந்த வாளாயுதங்கள் ஒன்றோடு ஒன்று; இடை தேய்ந்து - நடுவிலே உராய்தலால்; உகும் பொறியின் - வெளிச் சிந்தும் தீப் பொறிகளால்; கான் எங்கும் - அந்த வனம் எங்கும்; வெம் கனல் பொங்க - கொடிய நெருப்பு ஓங்கியெழவும்; ஏ - ஈற்றசை. அரக்கப் படை வீரர்க்குத் தறியின் நீங்கிய தாழ் தடக்கைத் துணை மத வேழங்கள் உவமையாம். இந்தப் பாடல், தேர்ப் படையைத் தொடர்ந்து சென்ற அரக்கப் படை வீரர்களின் செறிவையும் அவர்கள் ஏந்திய வாட்படைகளின் மிகுதியையும் விளக்கியது. தறி - தூண். தன்னைக் கட்டியுள்ள தறியைக் கடுங்கோபத்தால் முறித்துத் தள்ளிவிட்டுத் தடையின்றி வெளிச் செல்வது மதயானையின் இயல்பு. 27 | 2902. | முருடு இரண்டு முழங்குறத் தாக்கு ஒலி உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக, அருள் திரண்ட அருக்கன் தன்மேல், அழன்று இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே, |
இரண்டு - இரண்டு பக்கங்களிலும்; முருடு முழங்குற - முருடு என்னும் போர்ப் பறை முழக்கம் உண்டாகும்படி; தாக்கு ஒலி - அடிக்கப்படுதலாலாகிய ஓசை; உருள் திரண்டு எழும் - சக்கரங்கள் பல ஒன்றாக உருளுவதால் உண்டாகும்; தேர் ஒலியுள் புக - தேர்களின் ஆரவாரத்தினுள்ளே அடங்கவும்; அருள் திரண்ட - கருணையே (ஓருருவாகத்) திரண்டு வடிவெடுத்தாற் போன்று விளங்கும்; அருக்கன்தன் மேல் - சூரியன்மேல்; அழன்று - கோபித்து; இருள் திரண்டு வந்து ஈண்டியது என்ன - இருளெல்லாம் ஒன்று சேர்ந்து நெருங்கியது போலவும். இராமனுக்குச் சூரியனையும், அவன்மேல் போருக்கு எழுந்து நெருங்கிய அரக்கர் சேனைக்குச் சூரியன்மேல் வந்து நெருங்கிய இருளின் தொகுதியையும் உவமை கூறியதால் கதிரவன்முன் இருள் போல இராமபிரான்முன் அரக்கர்கள் எளிதில் அழியப் போவது பெறப்படும். |