| | காற்றுஇனம் ஆர்த்தன, கழுதை ஆர்த்தன, தோற்றின மாத்திரத்து உலகு சூழ்வரும் பாற்றுஇனம் ஆர்த்தன, பணிலம் ஆர்த்தன. |
ஏற்று இனம் ஆர்த்தன - எருதுகளின் கூட்டம் கட்டப்பட்டவையும்; ஏனம் ஆர்த்தன - பன்றிகள் கட்டப்பட்டவையும்; காற்று இனம் ஆர்த்தன - காற்று வடிவான பேய்க் கூட்டங்கள் கட்டப்பட்டவையும்; கழுதை ஆர்த்தன - கழுதைகள் கட்டப்பட்டவையும்; பாற்றினம் ஆர்த்தன - பருந்து வகைகள் கட்டப்பட்டவையும்; தோற்றின மாத்திரத்து - மனத்தே எண்ணிய அளவிலே; உலகு சூழ்வரும் - உலகத்தைச் சுற்றி வரும் தன்மையுள்ளனவும்; பணிலம் ஆர்த்தன - சங்குகள் முழங்கினவுமான. இறுதியிலுள்ள ஆர்த்தன என்பது முற்று; மற்றவை பெயர்கள். காற்று - பேய் : உலகவழக்கு பாறு - கழுகு, பருந்து. (பாறு + இனம் = பாற்றினம்). 32 | 2907. | தேர்இனம் துவன்றின; சிறு கண் செம் முகக் கார்இனம் நெருங்கின; காலின், கால் வரு தார்இனம் குழுமின;-தடை இல் கூற்று எனப் பேர்இனம் கடல் எனப் பெயருங்காலையே. |
தேர் இனம் - தேர்களின் கூட்டங்கள்; துவன்றின - நெருங்கின; சிறுகண் செம்முகக் கார் இனம் - சிறிய கண்களையும் சிவந்த முகத்தையுமுடைய மேகங்களைப் போன்ற யானைக் கூட்டங்கள்; நெருங்கின - அடர்ந்தன; காலின் கால்வரு - காற்றைப் போலக் கால்களால் விரைந்து ஓடி வரும்; தார் இனம் - குதிரைப் படைகளின் கூட்டங்கள்; குழுமின - திரண்டன; தடை இல் கூற்று என - தடுக்கப் படாத யமனைப் போல; பேர் இனம் - பெரிய அரக்கராகிய காலாட் படை; கடல் என - கடல் போல; பெயரும் காலை - செல்லும் பொழுதில்; ஏ - ஈற்றசை. கார் - உவமவாகுபெயர் : யானை என்பது விளங்கச் 'சிறுகண் செம்முகக் கார்' என்றார் சிறிய கண்களும் செம்புள்ளிகளும் உத்தம யானைக்கு இலக்கணமாம். தார் : குதிரைச் சேனை. துவன்றின், நெருங்கிய, குழுமின என்பவற்றில் ஒரு பொருளே மீண்டும் வந்ததால் பொருட் பின்வரு நிலையணியாம். முன்னே காலாட்படை |