பெயரத் தேர், யானை, குதிரை என்னும் முப்படைகளும் பின்னே பெயர்த்தன என்பது கூறப்பட்டது. தார் - கிண்கிணிமாலை. அதனைப் பூண்ட குதிரை என்க. 33 கரன் படையினர் ஏந்திய போர்க் கருவிகள் | 2908. | மழுக்களும், அயில்களும், வயிர வாள்களும், எழுக்களும், தோமரத் தொகையும், ஈட்டியும், முழுக் கலும், முசுண்டியும், தண்டும், முத் தலைக் கழுக்களும், உலக்கையும், கால பாசமும். |
மழுக்களும் - எரியிரும்பு ஆயுதங்களும்; அயில்களும் - வேற்படைகளும்; வயிர வாள்களும் - உறுதியான வாட் படைகளும்; எழுக்களும் - குத்துக் கோல்களும்; தோமரத் தொகையும் - ஏறியீட்டிகளின் தொகுதியும்; ஈட்டியும் - பெரிய ஈட்டிகளும்; முழுக்கலும் - முழுக் கற்களான கவண் கற்களும்; முசுண்டியும் - முசுண்டியென்னும் சிறுவாள்களும்; தண்டும் - தண்டாயுதமாகிய கதைகளும்; முத்தலை கழுக்களும் - மூன்று தலைகளையுடைய சூலங்களும்; உலக்கையும் - உலக்கைகளும்; கால பாசமும் - கால பாசமாகிய சுருக்குக் கயிறுகளும். முசுண்டி - சிறுவாள் 2908, 2909, 2910 ஆகிய மூன்று செய்யுட்கள் படையினர் எடுத்துச் சென்ற படைக் கருவிகளைக் கூறும். 34 | 2909. | குந்தமும், குலிசமும், கோலும், பாலமும், அந்தம் இல் சாபமும், சரமும், ஆழியும், வெந் தொழில் வலயமும், விளங்கு சங்கமும் பந்தமும், கப்பணப் படையும், பாசமும், |
குந்தமும் - சிறிய ஈட்டிகளும்; குலிசமும் - வச்சிரப் படைகளும்; கோலும் - தடிகளும்; பாலமும் - பிண்டிபாலமென்னும் முறுக்குத் தடிகளும்; அந்தம் இல் சாபமும் - அளவில்லாத விற்களும்; சரமும் - அம்புகளும்; ஆழியும் - சக்கரப் படைகளும்; வெந் தொழில் வலயமும் - கொடிய தொழிலையுடைய வளையங்களும்; விளங்கு சங்கமும் - வெண்ணிறமாக விளங்கும் சங்குகளும்; பந்தமும் - தீப் பந்தங்களும்; கப்பணப் படையும் - கப்பணமென்னும் ஆயுதங்களும்; பாசமும் - கயிறுகளும்-; |