தனது பெருமுழக்கத்தால் பகைவரை அஞ்சச் செய்து அழித்தலால் சங்கும் ஆயுதத்தின் பால் சேரும். திருமாலின் ஐந்து படைகளுள் பாஞ்சசன்னியம் என்ற சங்கும் ஒன்றாதலை அறியலாம். கப்பணம் - இரும்பால் யானை நெருஞ்சிமுள் வடிவில் செய்த கருவி. 35 | 2910. | ஆதியின், அருக்கனும் அனலும் அஞ்சுறும் சோதிய, சோரியும் தூவும் துன்னிய,- ஏதிகள் மிடைந்தன, - இமையவர்க்கு எலாம் வேதனை கொடுத்தன, வாகை வேய்ந்தன. |
ஆதியின் - (மழு முதலாகப் பாசம் ஈறாக முன் சொன்னவை) முதலாகவுள்ள; அருக்கனும் அனலும் - சூரியனும் அக்கினியும்; அஞ்சுறும் சோதிய - அஞ்சத்தக்க ஒளியுடையனவும்; சோரியும் தூவும் துன்னிய - (பகைவரின்) இரத்தமும் மாமிசமும் நிறைந்து பொருந்தினவையும்; இமையவர்க்கு எலாம் - தேவர்களுக்கெல்லாம்; வேதனை கொடுத்தன - (முன்னைய போர்களில்) துன்பந் தந்தவையும்; வாகை வேய்ந்தன - (வெற்றிக்கு அடையாளமான) வாகைப் பூமாலை சூடிய வையுமாகிய; ஏதிகள் மிடைந்தன - ஆயுதங்கள் நெருங்கி விளங்கின. தூ - தசை. வாகை - இருமடியாகுபெயர். சோரியும் தூவும் துன்னியது- முன்பு தேவர்களுடன் செய்த போர்களில் தாக்கிப் பகைவரின் இரத்தத்தையும், அவரது உடலின் மாமிசத்தையும் கொண்டமை. ஆதியின் - ஏதிகள் என இயையும். 36 தானைத் தலைவரும் சேனை வீரரும் | 2911. | ஆயிரம் ஆயிரம் களிற்றின் ஆற்றலர்; மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர்; தீ எரி விழியினர்; - நிருதர் சேனையின் நாயகர், பதின்மரோடு அடுத்த நால்வரே. |
ஆயிரம் ஆயிரம் களிற்றின் ஆற்றலர் - பல ஆயிரக்கணக்கான யானைகளின் வலிமையுடையவர்களும்; மா இரு ஞாலத்தை - மிகப் பெரிய |