உலகத்தையே; விழுங்கும் வாயினர் - விழுங்கக் கூடிய பெரிய வாயையுடையவர்களும்; தீ எரி விழியினர் - நெருப்பு மூண்டெழுகின்ற கண்களையுடையவர்களும் ஆகிய; பதின்மரோடு அடுத்த நால்வர் நிருதர்- பதினான்கு அரக்க வீரர்கள்; சேனையின் நாயகர் - அச் சேனைக்குத் தலைவர்களாவார்கள்; ஏ - ஈற்றசை. 'மாயிரு ...... வாயினர்' - உயர்வு நவிற்சியணி மற்றவை - தன்மை நவிற்சியணி. இங்கே கூறிய படைத்தலைவர், முன்பு இராமனது அம்பால் இறந்த (2894) படைத் தலைவர் பதினால்வரின் வேறாவர்; மாஇரு - ஒரு பொருட் பன்மொழி. 37 | 2912. | ஆறினோடு ஆயிரம் அமைந்த ஆயிரம் கூறின ஒரு படை; குறித்த அப் படை ஏறின ஏழினது இரட்டி என்பரால்- ஊறின சேனையின் தொகுதி உன்னுவார். |
ஊறின சேனையின் தொகுதி உன்னுவார் - (வலிமையில்) ஊன்றிய படையின் தொகையை எண்ணிக் கணக்கிடுபவர்; கூறின ஒரு படை - முன் சொல்லிய சேனைகளுள் ஒரு சேனை; ஆறினோடு ஆயிரம் அமைந்த ஆயிரம் - அறுபது இலட்சமாகும்; குறித்த அப்படை - அவ்வாறு கணக்கிடப்பட்ட அந்தப் படைகளின்; ஏழினது இரட்டி ஏறின - ஏழின் இரு மடங்காகப் பெருக்கப்பட்ட பதினான்காகும்; என்பர் - என்று கூறுவர். ஆல் : அசை ஆறினால் பெருக்கிய, ஆயிரத்தால் பெருக்கிய ஆயிரம் எனக் கொள்க. அங்குப் போருக்கு வந்த படை ஒன்றுக்கு அறுபது இலட்சம் கொண்ட பதினான்கு படைகள் இருந்தன என்பது. 38 | 2913. | உரத்தினர்; உரும் என உரறும் வாயினர்; கரத்து எறி படையினர்; கமலத்தோன் தரும் வரத்தினர்; மலை என, மழை துயின்று எழு சிரத்தினர்; தருக்கினர்; செருக்கும் சிந்தையார். |
|