கவர்ந்து கொண்டவையும்; துயக்கு இல் கந்தர்ப்பரை - சோர்வில்லாத வலிய கந்தர்வர்களை; துரந்து வாரின - துரத்தியோடச் செய்து அவர்களிடமிருந்து வாரிக் கொண்டவையும்; நயப்புறு சித்தரை - அன்பு மிகுந்த சித்தர்களை; நலிந்து வவ்வின - வருந்திக் கவர்ந்தவையுமான-; இந்தச் செய்யுளால் அச் சேனையிற் கட்டியுள்ள கொடிகள் இன்னின்ன வகையாய் வந்தன என்பதைக் கூறுகிறார். அவுணர் என்பார் ஓர் அரக்க இனத்தவர். முரண்படும் தெய்வ இனத்தவராயினும் தம் இனத்தவராகிய வேறுபட்டவராயினும் இலங்கை அரக்கரின் கொடுமைக்கு இலக்காவர் என்பது இப்பாடலின் குறிப்பு. நயப்புறு சித்தர் என்பதால் எவருடைய அன்புக்கும் உரியவர் அவர் என்பது தெளிவு. ஆயினும் இலங்கை அரக்கர் அவர்களிடமும் அன்பு பாராட்ட மாட்டார்கள் என்பது உணர்த்தப்பட்டது. இச் செய்யுள் அடுத்த செய்யுளுடன் (2922) இயைந்து வினை முடிவு கொள்ளும். 47 | 2922. | கொடி, தழை, கவிகை, வான் தொங்கல், குஞ்சரம் படியுறு பதாகை, மீ விதானம், பல் மணி இடையிலாது எங்கணும் இசைய மீமிசை மிடைதலின், உலகு எலாம் வெயில் இழக்கவே. | கொடி - துகிற்கொடிகளும்; தழை - மயிற்பீலிகளும்; கவிகை - குடைகளும்; வான் தொங்கல் - உயர்ந்த குஞ்சங்களும்; குஞ்சரம் படியுறு பதாகை - யானைகளின் மேல் பொருந்திய பெரிய கொடிகளும்; மீ விதானம் - மேற்கட்டிகளும்; பல் மணி இடையிலாது - பல வகை இரத்தினங்களும் இடைவெளியில்லாமல்; எங்கணும் இசைய - எல்லா இடத்தும் பொருந்த; மீமிசை மிடைதலின் - வானத்தில் நெருங்குவதால்; உலகு எலாம் வெயில் இழக்கவே - உலகங்களெல்லாம் சூரியனொளியை இழந்தன. கொடி முதலியன உலகு முழுவதும் வெயில் புகாதபடி மறைத்து இருளைச் செய்தன என்பது தொடர்புயர்வு நவிற்சியணி. தொங்கல்; குஞ்சம்; ஆகுபெயர்கள். 48 பெருந் தானையோடு கரன் இராமன் உறைவிடம் சேர்தல் | 2923. | எழுவரோடு எழுவர் ஆம், உலகம் ஏழொடு ஏழ் | |