| | தழுவிய வென்றியர், தலைவர்; தானையர்:- மழுவினர், வாளினர்; வயங்கு சூலத்தர்; உழுவையோடு அரி என உடற்றும் சீற்றத்தார்; |
எழுவரோடு எழுவர் ஆம் தலைவர் - பதினால்வராகிய அந்தச் சேனைத் தலைவர்கள்; உலகம் ஏழொடு ஏழ் தழுவிய வென்றியர் - பதினான்கு உலகங்களிலும் பொருந்திய வெற்றியையுடையவர்கள்; தானையர் - பெரும்படையுடையவர்கள்; மழுவினர் - மழுவையுடையவர்கள்; வாளினர் - வாளைத் தாங்கியவர்கள்; வயங்கு சூலத்தர் - விளங்கும் சூலத்தையுடையவர்கள்; உழுவையோடு அரி என - புலியும் சிங்கமும் போல; உடற்றும் சீற்றத்தார் - (பிறவுயிரை) வருத்தும் சினமுடையவர்கள். இங்குக் கூறப்பெற்ற பதினான்கு தானைத் தலைவர் வேறு; முன்பு போரில் மடிந்தவர் வேறு; 49 | 2924. | வில்லினர்; வாளினர்; இதழின் மீது இடும் பல்லினர்; மேருவைப் பறிக்கும் ஆற்றலர்; புல்லினர் திசைதொறும்; புரவித் தேரினர்; சொல்லின முடிக்குறும் துணிவின் நெஞ்சினர். |
வில்லினர் - வில்லையுடையவர்களும்; வாளினர் - உடை வாளையுடையவர்களும்; இதழின் மீது இடும் பல்லினர் - உதடுகளின் மேல் வைத்து ஊன்றும் பற்களையுடையவர்களும்; மேருவை பறிக்கும் ஆற்றலர் - மகா மேருமலையையும் பறித்தெடுக்கக் கூடிய வல்லமையுடையவர்களும்; புரவித் தேரினர் - குதிரைகள் பூட்டப் பெற்ற தேரினையுடையவர்கள்; சொல்லின முடிக்குறும் - (தாம்) சொல்லியவற்றைச் சொன்னவாறே செய்து முடிக்கவல்ல; துணிவின் நெஞ்சினர் - வலிமையுள்ள மனமுடையவர்களுமான அவர்கள்; திசை தொறும் புல்லினர் - எல்லாத் திக்குகளிலும் வந்து சூழ்ந்து நின்றார்கள். இதழின் மிதிடும் பல்லினர் என்பது சினத்தின் மெய்ப்பாடு. 50 | 2925. | தூடணன், திரிசிராத் தோன்றல், ஆதியர், |
|