பக்கம் எண் :

286ஆரணிய காண்டம்

மீளி மொய்ம்பினரும், 'சேனை மேல்வந்தது
     உளது' என்று உன்னா,

    தூளியின் படலை - தூசியின் தொகுதி; வந்து தொடர்வு உற -
முன்னே வந்து படியவும்; மரமும் தூறும் - (அக் காட்டிலிருந்த)
மரங்களும் புதர்களும்; தாள்இடை ஒடியும் ஓசை - வரும் அரக்க
வீரர்களின் கால்களில் அகப்பட்டு ஒடிவதால் உண்டாகிய ஓசை; 'சடசட'
ஒலிப்ப -
சடசடவென்று ஒலிக்கவும்; கானத்து ஆளியும் - காட்டிலுள்ள
யாளிகளும்; அரியும் - சிங்கங்களும்; அஞ்சி இரிதரும் - பயந்து
நிலைகெட்டு ஓடுகின்ற; அமலை நோக்கி - பேராரவாரத்தைப் பார்த்து;
மீளி மொய்ம்பினரும் - வலிய தோள்களையுடைய இராமலக்குவரும்;
சேனை மேல் வந்தது உளது என்று உன்னா - அரக்கர் சேனை
தம்மோடு போருக்கு வந்துள்ளது என்று எண்ணி..

     உன்னா என்னும் செயவென் எச்சம் அடுத்த செய்யுளிலுள்ள
மொழியலுற்றான் என்ற வினை கொண்டு முடியும். படலை - கூட்டம்,
தொகுதி; அமலை - பேரொலி. சடசட - ஒலிக்குறிப்பு.

     தூளியின் தொகுதியும், சடசட ஒலியும், ஆளியும் சிங்கமும்
அஞ்சியோடும் ஆரவாரமும் நோக்கி மீளி மொய்ம்பினரான
இராமலக்குவரும் அரக்கர் சேனை போர் செய்ய வந்துள்ளது என்று
எண்ணினர் என்பது.                                           59

இலக்குவனைத் தடுத்து இராமன் போருக்கு எழுதல்

2934.மின் நின்ற சிலையன், வீரக்
     கவசத்தன், விசித்த வாளன்,
பொன் நின்ற வடிம்பின் வாளிப்
     புட்டிலன், புகையும் நெஞ்சன்,
'நில்; நின்று காண்டி, யான் செய்
     நிலை' என விரும்பி நேரா
முன் நின்ற பின் வந்தோனை
     நோக்கினன், மொழியலுற்றான்:

    மின் நின்ற சிலையன் - மின்னல் போன்று ஒளி பொருந்திய
வில்லைத் தாங்கியவனும்; வீரக் கவசத்தன் - அழியாத வலிமை வாய்ந்த
கவசத்தையுடையவனும்; விசித்த வாளன் - (இடையில்) கட்டிய
உடைவாளையுடையவனும்; பொன் நின்ற - அழகு பொருந்திய; வடிம்பின்
வாளிப் புட்டிலன் -
நுனியுள்ள அம்புகளைக் கொண்ட அம்பறாத்
தூணியையுடையவனும்; புகையும் நெஞ்சன் - கோபத் தீ மூண்ட
மனமுடையவனுமாய் (இராமனை நோக்கி); 'நில் - (போர் தொடங்காது) நில்;
நின்று - (அப்படி) நின்று; யான் செய் நிலை - நான் செய்யக் கூடிய
போரின் திறமையை; 'காண்டி' என - காண்பாய் என்று சொல்லி; விரும்பி-
(போர் செய்ய) விருப்பங் கொண்டு; நேரா - போருக்கு ஆயத்தமாகி;
முன் நின்ற - (தனக்கு) முன்னே வந்து நின்ற; பின் வந்தோனை - (தன்)