பக்கம் எண் :

கரன் வதைப் படலம் 287

தம்பியான இலக்குவனை; நோக்கினன் - பார்த்து; மொழியல் உற்றான் -
(இராமன்) சொல்லத் தொடங்கினான்.

     வனத்திலே கொடிய அரக்கர்களாலும், கொடிய மிருகங்களாலும் தன்
தமையனுக்கும், அவன் மனைவிக்கும் என்றேனும் ஏதேனும் தீங்கு
நேருமோ என்று சந்தேகித்து இலக்குவன் எப்பொழுதும் விழிப்போடு
வில்லேந்தித் தூணி தாங்கிக் கவசம் தரித்து வாள் கட்டிப் போருக்குச்
சித்தனாக நிற்பவன். அவ்வாறு நின்ற அவன் இப்போது போர் வருவது
தெரிந்தவுடனே பின்னும் போர் முயற்சியை மேற்கொள்கிறான் என்பது.

     மின்நின்ற சிலை : இல்பொருளுவமை. விரும்பி நேரா - போர் செய்ய
விரும்பி அதற்கு உடன்பட்டு என்றும் பொருள் கொள்ளலாம்.         60

2935.'நெறி கொள் மா தவர்க்கு, முன்னே
     நேர்ந்தனென்: "நிருதர் ஆவி
பறிக்குவென் யானே" என்னும்
     பழமொழி பழுதுறாமே,
வெறி கொள் பூங் குழலினாளை, வீரனே!
     வேண்டினேன் யான்,
குறிக்கொடு காத்தி; இன்னே கொல்வென்,
     இக் குழுவை' என்னா,

    வீரனே - வீரனே; நெறி கொள் மாதவர்க்கு - தவவொழுக்கத்தைக்
கடைப் பிடிக்கும் தவ முனிவர்களுக்கு; முன்னே நேர்ந்தனென் -
முன்னமே நான் உடன்பட்டு; யானே நிருதர் ஆவி பறிக்குவென் -
நானே அரக்கர்களின் உயிரைக் கவர்வேன்; என்னும் பழமொழி - என்று
உறுதிமொழி கூறிய பழைய வார்த்தை; பழுதுறாமே - வீண் போகாதவாறு;
இக் குழுவை இன்னே கொல்வேன் - இந்த அரக்கர் கூட்டத்தை
இப்பொழுதே கொல்வேன்; வெறி கொள் பூங் குழலினாளை -
மணங்கமழும் பூக்களைச் சூடின கூந்தலையுடைய சீதையை; குறிக்
கொடுகாத்தி -
நீ கருத்தோடு காப்பாய்; யான் வேண்டினேன் - நான்
உன்னை இது வேண்டினேன்; என்னா - என்று (இராமன் இலக்குவனிடம்)
சொல்லி.....;

     'புட்டில் கட்டிச் சாபமும் தரித்தான்' என வரும் அடுத்த செய்யுளோடு
தொடரும். அரக்கர்களுக்கு அஞ்சிச் சரணடைந்த தண்டகாரணிய
முனிவர்களுக்கு இராமன் அபயமளித்தது. அகத்தியப் படலத்தில்
கூறப்பெற்றது. குறிக் கொள்ளுதல்- உன்னிப்பாய்ப் பார்த்துக்கொள்ளுதல். 61

2936. மரன் படர் கானம் எங்கும்
     அதர்பட வந்த சேனை
கரன் படை என்பது எண்ணி, கரு
     நிறக் கமலக்கண்ணன்,