பக்கம் எண் :

288ஆரணிய காண்டம்

சரன் படர் புட்டில் கட்டி, சாபமும்
     தரித்தான்; தள்ளா
உரன் படர் தோளில் மீளாக் கவசம்
     இட்டு, உடைவாள் ஆர்த்தான்.

    மரன் படர் கானம் எங்கும் - மரங்கள் வளர்ந்த காடு முழுவதும்;
அதர்பட - வழியுண்டாக; வந்த சேனை - அங்கு வந்த அரக்கர் சேனை;
கரன் படை என்பது எண்ணி - கரனது சேனை என்பதை நினைத்து; கரு
நிறக் கமலக் கண்ணன் -
கரிய நிறத்தையும், தாமரை போன்ற
பொலிவையும் கொண்ட கண்களையுடைய இராமபிரான்; தள்ளா உரன்
படர் தோளில் -
(தன்) நீங்காத வலிமை மிக்க தோளிலே; சரன் படர்
புட்டில் கட்டி-
அம்புகள் நிறைந்த தூணியைக் கட்டி; சாபமும் தரித்தான்-
வில்லையும் தரித்தவனாகி; மீளாக் கவசம் இட்டு - தகர்க்க முடியாத
கவசத்தைத் தரித்து; உடைவாள் ஆர்த்தான் - உடைவாளையும்
(அரையில்) கட்டினான்.

     மரன், சரன், உரன் மாறி வரும் கடைப் போலி, வந்தது கரன்
படையே என இராமன் தீர்மானித்தது முன் "கரனை, உங்கள் கூற்றுவனை
இப்பொழுதே கொணர்கிறேன்" (2874) என்று சூர்ப்பணகை கூறிச்
சென்றுள்ளாளாதலால் என்க. மதர்பட எனப் பாடங்கொண்டு செருக்கு
மேலிட்டு எனப் பொருள் கூறுதலுமுண்டு.                          62

'இப் போரினை எனக்கு அருள்க என, இலக்குவன் மீண்டும் வேண்டுதல்

2937.'மீள அருஞ் செருவில், விண்ணும்
     மண்ணும் என்மேல் வந்தாலும்,
நாள் உலந்து அழியும் அன்றே? நான்
     உனக்கு உரைப்பது என்னே?
ஆளியின் துப்பினாய்! இவ் அமர்
     எனக்கு அருளிநின்று, என்
தோளினைத் தின்னுகின்ற சோம்பினைத்
     துடைத்தி' என்றான்.

    ஆளியின் துப்பினாய் - யாளி போன்ற வலிமையுடையவனே!;
விண்ணும் மண்ணும் - வானுலகத்து உயிர்களும், இம் மண்ணுலகில்
வாழ்பவர்களும்; மீள அருஞ் செருவில் - வென்று திரும்பிச் செல்ல
முடியாத போரில்; என் மேல் வந்தாலும் - என்னை எதிர்த்துத் திரண்டு
வந்தாலும்; நாள் உலந்து அழியும் அன்றே - (அந்த வானுலக
உயிர்களும் நிலவுலக உயிர்களும் ஆகிய யாவும்) என் முன்னே தம்
ஆயுட் காலம் ஒழிந்து அழிந்திடுமல்லவா?; நான் உனக்கு உரைப்பது
என்னே -
இதைப் பற்றி நான் உனக்குச் சொல்ல வேண்டுவது உண்டோ?;
இவ் அமர் எனக்கு அருளி நின்று - (ஆதலால்) இந்தப் போரை எனக்கு
நீ கொடுத்து; என்