| | மீளி மொய்ம்புடை இவுளி வீழ்கின்றன; விரவி, ஞாளியோடு நின்று, உளைக்கின்ற நரிக் குலம் பலவால்; |
'வாளின் வாய்களை - வாள்களின் வெட்டு வாய்களை; ஈ வளைக்கின்றன - ஈக்கள் சுற்றுகின்றன; வயவர் தோளும் நாட்டமும் - படை வீரர்களின் தோள்களும் கண்களும்; இடம் துடிக்கின்றன - இடப் பக்கமாகத் துடிக்கின்றன; மீளி மொய்ம்புடை இவுளி - வலிய தோள்களையுடைய சேனைத் தலைவரின் குதிரைகள்; தூங்கி வீழ்கின்றன - (போர் செய்யும் நிலையில்) தூங்கிக் கீழே விழுகின்றன; ஞாளியோடு நரிக்குலம் பல - நாய்களோடு பல நரிக் கூட்டங்கள்; விரவி நின்று - சேர்ந்து வந்து நின்றவாறு; உளைக்கின்ற - ஊளையிடுகின்றன; ஆல் - ஈற்றசை. ஆயுதங்களின் வெட்டு வாய்களை ஈக்கள் சுற்றுவதும், வீரர்களின் தோள்களும் கண்களும் இடம் துடிப்பதும், குதிரைகள் தாமே தூங்கிவிடுவதும், நாய் நரிகள் ஊளையிடுவதும் தீ நிமித்தங்களாகும். உளைக்கின்ற - பலவின் பால் முற்று. 71 | 2946. | 'பிடி எலாம் மதம் பெய்திட, பெருங் கவுள் வேழம் ஒடியுமால் மருப்பு; உலகமும் கம்பிக்கும்; உயர் வான் இடியும் வீழ்ந்திடும்; எரிந்திடும் பெருந்திசை; எவர்க்கும் முடியின் மாலைகள் புலாலொடு முழு முடை நாறும் |
'பிடி எலாம் - பெண் யானைகளெல்லாம்; மதம் பெய்திட - மதநீரைச் சொரிய; பெருங்கவுள் வேழம் - பெரிய கதுப்புகளையுடைய ஆண் யானைகளின்; மால் மருப்பு ஒடியும் - பெரிய தந்தங்கள் ஒடிந்து விழுகின்றன; உலகமும் கம்பிக்கும் - பூமியும் அதிர்ச்சியடைந்து நடுங்குகின்றது; உயர் வான் இடியும் - ஓங்கிய வானத்திலிருந்து இடிகளும்; வீழ்ந்திடும் - மேலே விழும்; பெருந் திசை எரிந்திடும் - பெரிய திக்குகள் தாமே தீப் பற்றி எரிகின்றன; எவர்க்கும் - (அரக்கர்) எல்லோருக்கும்; முடியின் மாலைகள் - (தம்) தலையின் மேலே அணிந்த பூமாலைகள்; புலாலொடு முழு முடை நாறும் - புலால் நாற்றத்தோடு் மிக்க கெட்ட நாற்றமும் வீசுகின்றன; ஆல் - அசை. பெண் யானைக்கு இயற்கையில் மதம் இல்லை; ஆதலால் அவை மதநீர் பொழிதல் தீ நிமித்தமாகும். பெண் யானைகள் மதநீரைச் சொரிவதும், ஆண்யானைகளின் தந்தங்கள் ஒடிவதும், உலகம் நடுங்குவதும் இடி |