| | தையலார் நெடு விழி எனக் கொடியன சரங்கள் |
தையலார் நெடு விழிஎன - மகளிரின் நீண்ட கண்களைப் போல; கொடியன சரங்கள்- கொடுமையான இராமபாணங்கள்; நிருதர் வெருவிட- அரக்கர் அஞ்சிடுமாறு; கைகள் வாளொடு - அவர்களின் கைகள் பிடித்திருந்த வாள்களோடு; களம்பட - போர்க் களத்தில் அறுபட்டு விழ; கழுத்து அற - கழுத்துக்கள் அறுபட; கவச மெய்கள் போழ்பட - கவசமணிந்த உடல்கள் பிளவுபட; தாள் விழ - கால்கள் அற்றுவிட; செய்ய மாத்தலை சிந்திட - (அவர்களுடைய) சிவந்த பெரிய தலைகள் சிதறிவிழ; திசை உறச் சென்ற - (செய்து) திக்குகளின் எல்லையை அளாவ அப்பாற் சென்றன. இராம பாணங்களுக்குத் தையலார் விழி உவமானமாயிற்று : உவமானத்தை உவமேயமாகக் கூறியதால்; எதிர்நிலையணி மகளிரின் கண்களைப் போன்று கூரியனவும், பெருந் துயரை விளைப்பனவுமான இராம சரங்கள், அரக்கரின் வாளேந்திய கைகளும் கால்களும் அற்று விழவும், கவசமணிந்த உடல்கள் பிளவுபடவும், கழுத்துக்கள் அறுபடவும், தலைகள் சிதறவும் செய்து திசையுறச் சென்றன என்றவாறு. 82 | 2957. | மாரி ஆக்கிய வடிக் கணை, வரை புரை நிருதர் பேர் யாக்கையின் பெருங் கரை வயின்தொறும் பிறங்க, ஏரி ஆக்கின; ஆறுகள் இயற்றின; நிறையச் சோரி ஆக்கின; போக்கின, வனம் எனும் தொன்மை. |
வரை புரை நிருதர் - மலைகளையொத்த அரக்கர்களின்; பேர் யாக்கையின் - பெரிய உடல்களாகிய; பெருங்கரை - பெரிய கரைகள்; வயின்தொறும் பிறங்க - பக்கங்களிலெல்லாம் விளங்க; ஏரி ஆக்கின - (வெற்றிடமான அங்கு) ஏரிகளின் தோற்றத்தைச் செய்தனவும்; ஆறுகள் இயற்றின - நதிகளின் தோற்றத்தை உண்டாக்கினவுமாகி; (அப்போது); மாரி ஆக்கிய - (இடைவிடாது சொரிவதால்) மழையின் தோற்றத்தைச் செய்த; வடிக் கணை - கூரிய இராம சரங்கள்; நிறையச் சோரி ஆக்கின - (ஏரியும் ஆறும் போன்ற வெற்றிடங்களை) நிறையும்படி இரத்தத்தைப் பெருகச் செய்தன (இவ்வாறு செய்ததால்); வனம் எனும் தொன்மை போக்கின - (தண்டக வனங்களின்) காடுகள் என்ற பழைய தன்மையை நீக்கிவிட்டன. இராமசரத்தால் இறந்து வீழ்ந்த அரக்கருடல்கள் ஏரிகளின் கரை போலவும், ஆறுகளின் கரை போலவும் அமைந்து இரு கரைகளுக்கும் இடைப்பட்ட இடங்களை நீரற்ற ஏரியின் உள்ளிடங்கள் போலவும், |