| | கானத்தன; மலையத்தன; திசை சுற்றிய கரியின் தானத்தன-காகுத்தன் சரம் உந்திய சிரமே. |
மிளிர் குண்டல வதனத்தன - விளங்குகின்ற குண்டலம் என்னும் காதணியைக் கொண்ட முகத்தையுடையனவும்; காகுத்தன் சரம் உந்திய சிரம் - இராமபிரானின் அம்புகளால் அறுத்துத் தள்ளப் பட்டனவுமாகிய தலைகள்; வானத்தன - மேக மண்டலத்தில் சென்று சேர்ந்தவையும்; கடலின் புற வலயத்தன - கடலின் வெளிவட்டத்திற் சென்று சேர்ந்தவையும்; மதி சூழ் மீனத்தன - சந்திரனைச் சூழ்ந்த நட்சத்திர மண்டலங்களிற் சென்று சேர்ந்தவையும்; மிடல் வெம் கானத்தன - வலிய கொடிய காடுகளில் சென்று சேர்ந்தவையும்; மலையத்தன - மலைகளிற் சென்று சேர்ந்தவையும்; திசை சுற்றிய கரியின் - திசைகளைச் சுற்றிலுமுள்ள (எட்டுத் திக்கு) யானைகளிடத்தில்; தானத்தன - சென்று சேர்ந்தவையுமாயின. ஏ - ஈற்றசை. அறுபட்ட தலைகள் எப்புறத்தும் நெடுந் தூரத்திற்கு அப்பால் சென்று விழுந்தன என்பது மீன் - விண்மீன்; வானத்தன, வலயத்தன - அ - ஆறனுருபு. 91 | 2966. | மண் மேலன; மலை மேலன; மழை மேலன; மதி தோய் விண் மேலன; நெடு வேலையின் மேல் கீழன; மிடலோர் புண் மேலன;-குருதிப் பொரு திரை ஆறுகள் பொங்க, திண் மேருவை நகு மார்பினை உருவித் திரி சரமே. |
புண் மேலன குருதி - புண்பட்ட உடல்களிலிருந்து பெருகும் இரத்த வெள்ளமாகிய; பொரு திரை ஆறுகள் பொங்க - மோதுகின்ற அலைகளையுடைய நதிகள் மிகும்படியாக; மிடலோர் - வலிமையுள்ள அரக்கர்களின்; திண் மேருவை நகு மார்பினை - வலிய மேருமலையையும் (தமது வலிமைக்கு ஈடாகாதென்று) இகழ்கின்ற மார்புகளை; உருவித் திரி சரம் - முழுவதும் துளைத்து அப்பாலே சென்ற இராமனுடைய அம்புகள்; மண் மேலன - தரையில் விழுந்தவையும்; மலை மேலன - மலைகளின் மேல் விழுந்தவையும்; மழை மேலன - மேகங்களின் மேற்பட்டவையும்; மதி தோய் விண் மேலன - சந்திரன் பொருந்தி விளங்கும் ஆகாயத்தின் மேல் சென்றவையும்; நெடு வேலையின் மேல் கீழன - பெரிய கடல்களின் மேலேயும் கீழேயும் உள்ளவையுமாயின; ஏ - ஈற்றசை. |